கட்டுமான பணிகளில் ‘திடீர்’ மாற்றங்கள் வேண்டாம்
கட்டுமான பணிகளை தொடங்கும்போது இடத்தை சமன் செய்து பணிகள் தொடங்கி செய்யப்படுவது வழக்கம்.
கட்டுமான பணிகளை தொடங்கும்போது இடத்தை சமன் செய்து பணிகள் தொடங்கி செய்யப்படுவது வழக்கம். அதற்கு முன்னர் கட்டமைப்பின் ஒட்டு மொத்த அளவுகள், அறைகளின் அளவுகள், எண்ணிக்கை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை வரைபடமாக தயார் செய்யப்படும். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் வரைபட அளவில் செய்வது எளிது.
ஆனால், கட்டமைப்பு வளர்ந்த பிறகு மற்றவர்களது விருப்பத்துக்கு ஏற்ப மாற்றங்கள் செய்தால் பண விரயம் ஏற்படும். அதனால் ஆரம்பம் முதலே கட்டுமான பணிகளில் அதுபோன்ற சூழ்நிலைகள் வராமல் கவனித்துக்கொள்ளவேண்டும். தொடக்கத்தில் அஸ்திவார அளவிலான மாற்றங்கள் செய்வது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தாது. அதன் பிறகு செய்யப்படும் மாற்றங்கள்தான் சிக்கல்களை அதிகமாக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் கட்டிட அமைப்பில் குறைபாடாகவும் மாறி விடும். சரியான திட்டம், நிதானமான செயல்பாடு ஆகியவை கட்டுமான பணிகளில் ஆரம்பம் முதல் அவசியம். கட்டிட சுவர்களை குறிப்பிட்ட அளவு வளர்ந்த நிலையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகள், அமைப்புகள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்வது பணம் விரயம் மற்றும் கால விரயம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் கவனமாக செயல்படவேண்டியது முக்கியம்.

Related Tags :
Next Story