தெரிந்து கொள்வோம்: ‘டோம்’


தெரிந்து கொள்வோம்: ‘டோம்’
x
தினத்தந்தி 28 April 2017 9:15 PM GMT (Updated: 28 April 2017 2:28 PM GMT)

‘டோம்’ என்ற கட்டுமான அமைப்பு தமிழில் குவிமாடம் என்று சொல்லப்படும். உலக அளவில் பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலை அமைப்புகளில் ஒன்றாக இது உள்ளது.

‘டோம்’ என்ற கட்டுமான அமைப்பு தமிழில் குவிமாடம் என்று சொல்லப்படும். உலக அளவில் பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலை அமைப்புகளில் ஒன்றாக இது உள்ளது. கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவத்தை கொண்ட கூரை அமைப்பாக இவை வடிவமைக்கப்படுகின்றன. பொதுவாக ‘டோம்கள்’ அரை வட்ட அமைப்பில் இருப்பினும், ஐந்துக்கும் மேற்பட்ட வகைகளில் இவை உள்ளன. டோம் அமைப்பு இயல்பாக வளைந்து அதன் பக்கங்களில் கீழிறங்கும் தன்மையானது அதற்கு வலிமையை தருவதாக உள்ளது. வழக்கமாக அமைக்கப்படும் சமதள பரப்பான மேற்கூரைகளின் எடையானது குறிப்பிட்ட சில இடங்களில் தாங்கப்படுகிறது. ஆனால், குவி மாடம் அதன் வடிவம் காரணமாக, எல்லா பகுதிகளிலும் அழுத்த விசையை ஏற்படுத்துவதால், முழு கட்டமைப்பும் அதன் எடையை தாங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. ‘குளோய்ஸ்டர்’, கோளப்பரப்பு, வெங்காய வடிவ குவிமாடம், முட்டை மற்றும் குடை வடிவம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ‘டோம்’ அமைப்புகள் உலக அளவில் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன.


Next Story