பழைய வீடுகளை இடிப்பதில் கவனம் வேண்டும்


பழைய வீடுகளை இடிப்பதில் கவனம் வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2017 3:15 AM IST (Updated: 28 April 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

• பழைய வீடுகளை இடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கச்சிதமாக கவனித்துக்கொள்வதோடு, பக்கத்தில் உள்ள வீடுகள் அல்லது மற்ற கட்டிட அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.

• பழைய வீடுகளை இடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கச்சிதமாக கவனித்துக்கொள்வதோடு, பக்கத்தில் உள்ள வீடுகள் அல்லது மற்ற கட்டிட அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எச்சரிக்கையாக செயல்படவேண்டும். பழைய கான்கிரீட் அமைப்புகளை இடிக்கும்போது அவை திடீரென்று சாய்ந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடிக்கும்போது உண்டாகும் தூசி தும்புகளால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தகரத்திலான தடுப்புகளை அமைக்க வேண்டும். பணியிலிருக்கும் ஆட்களின் பாதுகாப்பு அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.

• பழைய கட்டிடத்தை இடிப்பது மட்டுமல்லாமல் இடிபாடுகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவது மிக்க அவசியமானதாகும். இந்த இரண்டு வேலைகளையும் ஒரே காண்ட்ராக்டரே செய்வதுபோல பேசிக்கொள்வதும் நல்ல முறையாகும்.  இடிபாடுகளை அகற்றி, ஊருக்கு வெளியில், யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் போடுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

• பழைய கட்டுமானங்களை இடிக்கும்போது அதிலுள்ள மரக்கதவுகள், ஜன்னல்கள், இரும்பு ஐட்டங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக பிரித்தெடுக்க வேண்டும். அவை மீண்டும் உபயோகப்படுத்தும் விதமாக இருக்கும்பட்சத்தில் அதை உபயோகப்படுத்தலாம் அல்லது நல்ல விலைக்கு விற்பனை செய்து விடலாம்.

• கட்டிடத்தை இடிப்பதற்கு காண்ட்ராக்டரை நியமிக்கும்போது வேலையில் அவர்களது அனுபவங்களை மட்டும் பார்க்காமல், அங்கீகாரம் பெற்றவர்களா..? என்பதையும் கவனிக்க வேண்டும். அடுக்கு மாடிக்கட்டிடமாக இருக்கும்பட்சத்தில், இடிக்கும் வேலைகளில் இருக்கும் பாதுகாப்பு சார்ந்த வி‌ஷயங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

• பழைய கட்டுமானங்களை இடித்தபின்பு அதன் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதென்பது எளிதான வி‌ஷயமல்ல. அதில் ஈடுபடுபவர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருப்பவர்கள் ஆகியோர்களது பாதுகாப்பை பல கட்டங்களில் நாம் உறுதி செய்து கொள்வது முக்கியம். இடிப்பது, இடித்தவற்றை அப்புறப்படுத்துவது, என்னென்ன வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஆகும், மொத்தமாக எவ்வளவு நாட்களுக்குள் வேலை முடியும் என்ற தகவல்களை காண்ட்ராக்டரிடம் பேசிக்கொள்வது நல்லது.  அந்த விபரங்கள் கொண்ட ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட இருவரும் செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.  

Next Story