கண்களை கவரும் முப்பரிமாண தரைத்தளங்கள்
வீடுகளின் அழகை எடுப்பாக காட்டுவதில் தரைத்தளங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
வீடுகளின் அழகை எடுப்பாக காட்டுவதில் தரைத்தளங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அழகிய விதங்களிலும், பல்வேறு டிசைன்களிலும் அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு வகை தரைத்தள அமைப்புகள் தற்போது இருக்கின்றன. கண் கவரும் அம்சங்கள் கொண்டதாகவும், எளிய பட்ஜெட் கொண்டதாகவும் உள்ள தரைத்தளங்கள் தற்போது சில இடங்களில் அமைக்கப்படுகின்றன. அவை, மென்மையான அமைப்புடன் பாதங்களுக்கு இதமாக இருப்பதோடு, அழகான தோற்றத்துடனும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
3டி கிராபிக்ஸ் தரைகள்
டைல்ஸ், மார்பிள்ஸ், கிரானைட் மற்றும் ஸ்டாம்ப்டு கான்கிரீட் தரைகள் போன்ற பல வித தரைத்தள தொழில்நுட்பங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது புதுமையான 3டி கிராபிக்ஸ் தரைத்தள அமைப்புகள் பல இடங்களில் அறிமுகமாகியுள்ளன. இயற்கை காட்சிகளை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையிலும், வலிமை வாய்ந்த கற்களாகவும் இவை விளங்குவதோடு, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அழகிய காட்சிகளையும் இடம்பெறச்செய்யலாம். 3டி தொழில்நுட்பம் காரணமாக அதன் தோற்றம் தத்ரூபமாக இருப்பதோடு, வலிமையாகவும் இருக்கின்றன.
பல வண்ணங்கள்
வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் என பல வண்ண இயற்கை காட்சிகளோடு கண்களுக்கு விருந்தாகவும் இவை உள்ளன. புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளை இத்தகைய தரைத்தளத்தில் 3டி வடிவாக்கத்தில் தயாரித்து, அவற்றை டைல்ஸ் போன்ற தரைத்தளத்தில் ஒட்டும் கற்களாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றை சம்பந்தப்பட்ட வடிவத்துக்கேற்ப அமைத்து அந்த ஓவியங்களின் முழுமையான தோற்றத்தை தரைத்தளத்தில் தோன்றும்படி செய்து கொள்ளலாம். அதன் காரணமாக வீடுகளின் தரைகள் அலங்கார ஓவியங்களுடன் கிராபிக்ஸ் தரையாக கண்களை கவருகின்றன.
உறுதியானவை
கெட்டியான கண்ணாடிகளை பயன்படுத்துவதால் பளபளப்பான தன்மை கொண்டதாக இருப்பதோடு, கிரானைட் கற்களின் வலிமையுடனும் இவை தயாரிக்கப்படுகின்றன. பளபளப்புக்காக குறிப்பிட்ட சதவித அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதவாறு கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றைகொண்டு இவ்வகை புதுமையான 3டி பிரிண்டிங் முறையிலான கிராபிக்ஸ் தரைத்தளங்கள் அமைப்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னாலஜி
சிறந்த பளு தாங்கும் திறன் கொண்டதாக இவை காணப்பட்டுள்ளன. அறைகளின் அழகுக்கு இணையாக தரைத்தளத்தையும் அழகு படுத்தும் விதமாக பல வண்ணங்களில் சந்தையில் கிடைக்கின்றன. நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் தரைகளின் மேற்பரப்பில் பல வண்ணங்கள் ஒன்றாக இணைந்த தொழில்நுட்பத்துடனும் கிடைக்கின்றன. கிராபிக்ஸ் தரைகள் வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், கான்கிரீட் தரைத்தளத்துக்கு ஏற்றவிதமாக வளைத்தும், நெளித்தும் அமைக்கும் தன்மை கொண்டது. அதனால் வெவ்வேறு மட்ட தரைத்தளங்களிலும் இவற்றை சுலபமாக அமைக்கலாம்.
பராமரிக்கும் விதம்
3டி தரைத்தளமானது வழக்கமான தரைகளை போன்று பராமரித்தால் போதுமானது. மேற்பரப்பில் ஈரப்பதம் அல்லது தண்ணீர் படிந்திருந்தாலும் வழுக்காத வண்ணம் இவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாதங்களுக்கு மசாஜ் செய்வதுபோன்ற அனுபவத்தையும் இந்த அமைப்பு வழங்குகிறது. இந்த தரைகளை அமைக்கும்போது பொதுவான கட்டுமான முறைகளை கச்சிதமாக கடைப்பிடிக்கவேண்டும். பிரத்தியேக முறைகள் ஏதும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

Related Tags :
Next Story