வீடுகளில் கவனிக்க வேண்டிய முதியோர் பாதுகாப்பு அம்சங்கள்


வீடுகளில்  கவனிக்க  வேண்டிய  முதியோர்  பாதுகாப்பு  அம்சங்கள்
x
தினத்தந்தி 6 May 2017 1:15 AM IST (Updated: 5 May 2017 4:40 PM IST)
t-max-icont-min-icon

வயதானவர்கள் எளிதாக குளிப்பதற்காக சிறிய அளவில் ‘பிளாஸ்டிக் ஸ்டூல்’ ஒன்றையும், கால் வழுக்கிவிடாமல் இருப்பதற்காக கெட்டியான ‘பிளாஸ்டிக்’ மிதியடி அல்லது ‘புளோர் மேட்’ கீழே விரித்து வைத்திருக்கவேண்டும்.

யதானவர்கள் எளிதாக குளிப்பதற்காக சிறிய அளவில் ‘பிளாஸ்டிக் ஸ்டூல்’ ஒன்றையும், கால் வழுக்கிவிடாமல் இருப்பதற்காக கெட்டியான ‘பிளாஸ்டிக்’ மிதியடி அல்லது ‘புளோர் மேட்’ கீழே விரித்து வைத்திருக்கவேண்டும்.

மின்சார சாதனங்கள் அனைத்திற்கும் ‘கிரவுண்டு பால்ட் சர்க்கியூட் இன்ட்ரப்டர்’ எனப்படும் பாதுகாப்பு அமைப்பை இணைத்திருக்க வேண்டும். அந்த அமைப்பு கருவிகள் தவிர்த்து மனிதர்கள் மீதோ அல்லது மற்ற பொருள்களின் மீதோ மின்சாரம் பாயும்போது இணைப்பை துண்டித்து விடும்.

‘ஹேண்ட் கிராப் பார்’ எனப்படும் குழாய் அமைப்பை ஓரிரு இடங்களில் பொருத்த வேண்டும். அதை பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக அமர்வது அல்லது எழுவது வயதானவர்களுக்கு சுலபமானதாக இருக்கும்.

‘டாய்லெட் சீட்’ வழக்கமான உயரத்தைவிடவும் சற்றே அதிகமாக இருக்குமாறு ‘செட்டிங்’ செய்துகொள்வது முக்கியம். அதற்காக விஷேசமான ‘ரைஸ்டு குளோஸெட்கள்’ விற்பனைக்கு இருக்கின்றன.

‘டாய்லெட் சேப்டி ரயில்’ என்ற அமைப்பானது உட்காரக்கூடிய ‘டாய்லெட் சீட்டின்’ இரண்டு புறமும் பொருத்தப்பட்ட குழாய்கள் ஆகும். அவற்றின் உதவியால் அமர்வதும், எழுவதும் சுலபமாக இருக்கும்.

தண்ணீரால் பாதிக்காத அமைப்பில் ‘இண்டர்காம்’ அல்லது ‘கார்டுலெஸ்’ தொலைபேசி இணைப்பு ஒன்று குளியலறையில் இருக்கவேண்டும்.

வழுக்காத தரைத்தளம் அமைப்பதோடு ‘புளோர் மேட்கள்’ இருபுறமும் ஒட்டக்கூடிய ‘ஆன்டி ஸ்கிட் டேப்கள்’ கொண்டு ஒட்டப்பட வேண்டும்.

‘போல்டபிள் கம்மோட் சேர்’ என்ற அமைப்பை குளியலறையில் வைத்துக்கொள்ளலாம். அது தேவைப்பட்ட இடங்களில் நகர்த்தி வைத்து உபயோகிக்கக்கூடிய ‘டாய்லெட் சீட்’ அமைப்பாகும். அதாவது நகர்த்தக்கூடிய ‘டாய்லெட்’ இருக்கை என்று சொல்லலாம்.

கண்களை கூசாமல் வெளிச்சம் வருவது போன்று ‘லைட் செட்டிங்’ செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Next Story