மகிழ்ச்சி தரும் வண்ண மீன்கள்


மகிழ்ச்சி தரும் வண்ண மீன்கள்
x
தினத்தந்தி 12 May 2017 10:15 PM GMT (Updated: 12 May 2017 10:33 AM GMT)

வண்ண மீன் தொட்டி வாஸ்து ரீதியான குறைகளை சரி செய்வதற்காக வைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தாலும்,

அதில் கவனிக்கத்தக்க உளவியல் காரணம் இருப்பதாக மருத்துவர்களும், உளவியல் வல்லுனர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். வீடுகள், கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள், 'ஷாப்பிங் மால்கள்' மற்றும் திரையரங்குகள் என்று பல்வேறு இடங்களில் அவற்றை பார்க்க முடியும்.

மீன் வகைகள்

'ரெகுலர் கோல்டு', 'ரெட் கேப் கோல்டு', 'ஒரண்டா கோல்டு', 'சிங்கதலை கோல்டு', 'பேர்ல் ஸ்கேல் கோல்டு', 'ரூயிங் கோல்டு' 'பிளாக் மற்றும் சில்வர் மாலி' மற்றும் 'ஏஞ்சல்' என்று பலவகை மீன்கள் இருக்கின்றன. அவற்றை தவிர பிரபலமான வாஸ்து மீன்களான 'புளோரா' மற்றும் 'அரவானா' ஆகியவை விலை உயர்ந்தவையாக இருந்தாலும் அவற்றுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் 'கிரீன் ஸ்னோவொய்ட்', 'சில்வர் பிளாக்' வகை மீன்களும் விலை அதிகமாக இருந்தாலும் அவற்றை வளர்ப்பதிலும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

மீன் தொட்டிகள்

இந்திய மீன்கள் 'மாலிஸ்', 'கோல்டு பிஷ்', 'ஏஞ்சல்', 'டெட்ராஸ்', 'கப்பீஸ் பார்ஸ்', 'பைட்டர்' மற்றும் 'ரான்சூ கோல்டு பிஷ்' ஆகிய பலவகையான வண்ண மீன்களும் இருக்கின்றன பொதுவாக மீன் தொட்டிகளின் விலை 150 ரூபாய் முதல் தொடங்குகிறது. உள் அலங்காரத்துக்கு என்று 'ஸ்பெஷலாக' மர வேலைப்பாடுகள் கொண்ட 'ஸ்டாண்ட்' உடன் கூடிய அழகான தொட்டிகள் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருக்கின்றன. வீடுகளில் வைக்க விலை குறைவாகவும், கலைநயமும் உள்ள தொட்டிகளும் உள்ளன. தொட்டிக்குள் சிறுசிறு கற்கள், கூழாங்கற்கள், செடிகள் கொண்டு அழகுபடுத்தினால் மீன்கள் உற்சாகமாக நீந்துகின்றன. செயற்கை நீர்க்குமிழிகளை உருவாக்கும் 'பில்ட்டர்' வகைகள் அவசியம் பொருத்தப்பட வேண்டும்.

மனம் கவரும் மீன்கள்


வீட்டில் இருக்கும் மனம் கவரும் பொருட்களில் முக்கியமான இடத்தை பெற்றதாக மீன் தொட்டிகள் இருக்கின்றன. பொதுவாக மீன் தொட்டிகளை வீடுகளின் வரவேற்பறையில் மட்டுமே வைப்பது முறையாகும். வீடுகள் தவிர பிற இடங்களில் அவற்றை வைக்கும்போதும் முன் பகுதிகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வீடுகளின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் நீர் சக்தியையும், உயிர் சக்தியையும் குறிப்பிடும் வண்ண மீன் தொட்டிகள் வைக்கப்பட்டால் அந்த இடத்தில் இருக்கும் 'பாசிட்டிவ் எனர்ஜி' தூண்டப்படுவதாக வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வீடுகளில் வரவேற்பறை தவிர மற்ற இடங்களில் வாஸ்து காரணங்களை அனுசரித்து மீன் தொட்டிகள் வைக்கப்படு கின்றன.

மீன்கள் உணவு

'தையோ', 'டோக்கியோ', 'ட்ராகோ' போன்ற 'பிராண்டடு' உணவு வகைகள், வைட்டமின் உணவுகள், பதப்படுத்தப்பட்ட 'டிரை வார்ம்ஸ்' என்று பல வகை உணவுகள் மீன்களுக்காக இருக்கின்றன. தினமும் இரண்டு முறை உணவளித்தால் போதுமானது. அதிகமாக உணவிட்டால் மீன்கள் இறப்பதற்கு அதுவே காரணமாகி விடும். தொட்டியில் உள்ள தண்ணீரானது 30 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்றப்படுவது அவசியம். 

Next Story