கவனியுங்க.. ‘எம்-சாண்ட்’ பயன்பாடு
கட்டிடத்திற்கான பூச்சு வேலைகள் செய்ய ஆற்று மணலைவிட எம்-சாண்ட் சிறப்பான மாற்று வழியாக இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஆற்றுமணல் தட்டுப்பாடு என்பது மணல் விஷயத்தில் மாற்று வழிகளை கண்டறிந்து பயன்பட்டுக்கு கொண்டுவரவேண்டிய அவசியத்தை உண்டாக்கியிருக்கிறது. முன்னதாகவே பயன்பாட்டில் இருந்து வரும் எம்-சாண்ட் என்பது வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.
கட்டிடத்திற்கான பூச்சு வேலைகள் செய்ய ஆற்று மணலைவிட எம்-சாண்ட் சிறப்பான மாற்று வழியாக இருக்கிறது. பூச்சு வேலைகளுக்கு சிறப்பாக பொருந்தும்படி இதன் மூலக்கூறு அமைப்பு உள்ளது. ‘குவாரி டஸ்ட்’ மற்றும் கருங்கல் ஜல்லிகளை இயந்திரங்கள் மூலமாக அரைத்து, அதை சீரான அளவில் சலித்து எடுத்து, குறிப்பிட்ட அளவுகளில் விற்பனைக்கு வருகிறது. எம்-சாண்ட் உடன் ஆற்று மணலை 15 சதவிகிதம் அளவு கலந்து உடன் ‘சூப்பர் ப்ளாஸ்டிசைஸர்ஸ்’ சேர்த்து கலக்கி, சுவரின் பூச்சு வேலைகளுக்கு பயன்படுத்தலாம்.
மேலும், கருங்கல் துகள் என்ற நிலையில் அதன் செயல்படும் தன்மையில் சந்தேகங்கள் வேண்டியதில்லை என்று பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆற்று மணலை சலித்து பயன்படுத்துவது போல இதை சலிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஆற்று மணலுடன் 35 சதவிகித அளவில் கலந்தும் கட்டுமான பணிகளை செய்து கொள்ளலாம். மேலும், அடித் தளமட்டம் சரிசெய்யவும், சாதாரண கான்கிரீட் கலவையிலும், செங்கல் கட்டுமான வேலைகளுக்கும், தரை மட்டத்திலிருந்து தளமட்டம் வரை நிரப்பப்படும் பொருளாகவும் எம்-சாண்ட் பயன்படுத்தலாம்.
Related Tags :
Next Story