பத்திரங்கள் தொலைந்து விட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்


பத்திரங்கள் தொலைந்து விட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 20 May 2017 12:03 PM IST (Updated: 20 May 2017 12:03 PM IST)
t-max-icont-min-icon

பத்திரங்கள் தொலைந்து விட்டால் உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

வீடு, மனை உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றின் பத்திரங்கள், வங்கி கடன் பெறுவதற்காகவும், விற்பனை மற்றும் பிற வகை  அவசியங்களுக்காகவும் நம்மால் வெளியில் எடுத்துச்செல்லும்போது நம்மை அறியாமல் தொலைந்து விட்டால், அவற்றை மீட்கவோ அல்லது அவற்றுக்கான மாற்று பத்திரங்களை பெறுவதற்கோ எந்தவிதமான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற தகவல்கள் கீழ் வருமாறு :

• உடனே செய்யவேண்டியது என்னவென்றால், பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்து மூலமான புகாரை அளித்து அதற்குரிய ரசீது பெற வேண்டும்.

• இன்னவிதமான பத்திரம், இந்த இடத்தில் தொலைந்து விட்டது என்ற தகவலை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.

• குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பத்திரம் கிடைக்காத பட்சத்தில் காவல் துறையிலிருந்து பத்திரம் கிடைக்கவில்லை என்ற கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

• தொலைந்த பத்திரம் பற்றிய ஆட்சேபம் ஏதுமில்லை என்று நோட்டரி பப்ளிக் ஒருவரிடமிருந்து உறுதி மொழியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

• மேற்கண்ட தகவல்களோடு பத்திரிக்கையில் வந்த விளம்பத்தின் நகல், தொலைந்து விட்ட பத்திரத்தில் உள்ள சர்வே எண் விபரங்கள் உள்ளிட்ட இதர தகவல்கள் ஆகியவற்றோடு சார்பதிவாளரை அணுகி விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்.

• பிறகு, அலுவலக நடைமுறைப்படி ஓரிரு வாரங்களில் தொலைந்த பத்திரத்தின் பிரதி நமக்குக் கிடைக்கும்.

• பிரதி பத்திரத்தை பெற்றுக்கொண்ட பிறகு தொலைந்த பத்திரம் கிடைக்கும்பட்சத்தில், சார்பதிவாளரிடம் அதை முறையாக தெரிவித்து இரண்டு பத்திரங்களில் சட்டப்படி எது செல்லுபடியாகும் என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து கொள்வது அவசியம்.
1 More update

Next Story