அறைகளை அலங்கரிக்கும் புதிய ‘டிரெண்டுகள்’


அறைகளை அலங்கரிக்கும் புதிய ‘டிரெண்டுகள்’
x
தினத்தந்தி 27 May 2017 4:30 AM IST (Updated: 26 May 2017 3:36 PM IST)
t-max-icont-min-icon

கருப்பு ப்ரேம்களுடன் ஜன்னல்களை வடிவமைப்பது இப்போதைய டிரண்டாக உள்ளது.

ருப்பு ப்ரேம்களுடன் ஜன்னல்களை வடிவமைப்பது இப்போதைய டிரண்டாக உள்ளது. ஜன்னல்கள் வெளிச்சத்தை தருவதோடு அல்லாமல், வீட்டின் அழகிலும் ஜன்னல்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதனால், கருப்பு ஜன்னல்கள் பிரேம்கள் வித்தியாசமான தோற்றத்தில் வந்திருக்கின்றன.

மையப் படிக்கட்டு அமைப்பு

கச்சிதமான அறையின் மையத்தில் வந்து முடியுமாறு படிக்கட்டுகள் வடிவமைப்பதும் புது டிரெண்டாக உள்ளது. பார்வைக்கு அழகிய தோற்றத்தை தருவதாக உள்ள இவ்வகை வடிவமைப்பு அறையை அழகாக்கும்.

கிராபிக்ஸ் டைல்ஸ்


வீட்டு தோற்றத்தை பெரியதாக காட்ட இவ்வகை டைல்ஸ்கள் உதவுகின்றன. மேலும், வீட்டுக்கு பாரம்பரிய தோற்றத்தை தருகிறது. நீண்ட கால பயன்பாடு என்பதால், ரசனைக்கு ஏற்ப கச்சிதமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். அறையின் சுவர்களை அலங்கரிக்க இவை சிறந்த தேர்வாக இருக்கும்.

புதுமையான சோபாக்கள்

‘செக்‌ஷனல் சோபாக்கள்’ எனப்படும் இவ்வகை சோபாக்கள் சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் வரவேற்பை பெற்றுள்ளன. சிறிய வரவேற்பறையிலும் இந்த ‘செக்‌ஷனல் சோபாக்களை பயன்படுத்தலாம். அறையின் மூலைகளில் வைப்பதால், வரவேற்பறையில் நிறைய இடம் கிடைக்கும். ‘எல்’, ‘யூ’, ‘அரை வட்டம்’ போன்ற வடிவங்களில் இந்த சோபாக்கள் கிடைக்கின்றன.

‘ரூம் டிவைடர்கள்’

அறைகளை பிரிக்கும் செயற்கை தடுப்பு சுவர்களை ‘டிரான்ஸ்பரண்டாக’ காற்றோட்டம் கொண்டதாக அமைப்பது ‘ரிச் லுக்’ என்ற வகையை சேர்ந்தது. காற்றோட்டமான இவ்வகை டிவைடர்கள் அனைத்து அறைகளையும் இணைக்கக்கூடியவை. அதாவது இன்னொரு அறையிலிருந்து மற்றொரு அறையில் உள்ளவற்றையும் கவனிக்கலாம்.

டைனிங் ஹால் இல்லை  

இன்றைய சூழலில் டைனிங் ஹாலுக்கான இடத்தை வேறு வழிகளில் பயன்படுத்தலாம் என்ற மனநிலை இருக்கிறது. காரணம், சில குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உள்ள குடும்பங்களில் டைனிங் அறைக்கான தேவை மற்றும் நேரம் இல்லை என்று கருதப்படுகிறது. அதற்கு பதிலாக சமையலறையின் ஒரு பகுதி சாப்பிடும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

மிஸ் மேட்சிங்  

கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒரு பொருளைக்கொண்டு இன்னொரு விதமான வடிவமைப்பை உருவாக்கி அறைகளை வித்தியாசமாக வடிவமைக்கும் முறையாக இதை சொல்லலாம். சரியான திட்டமிடல்  மூலம் கச்சிதமாக செயல்பட்டால், அறைகளை வித்தியாசமான அலங்காரத்துடன் காண்பிக்க இயலும்.

Next Story