மூன்று வகை சிமெண்டு ‘கிரேடுகள்’


மூன்று வகை சிமெண்டு ‘கிரேடுகள்’
x
தினத்தந்தி 27 May 2017 4:30 AM IST (Updated: 26 May 2017 3:43 PM IST)
t-max-icont-min-icon

சிமெண்டு வகைகளை பொறுத்தவரை 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு என மூன்று விதமாக உள்ளன.

சிமெண்டு வகைகளை பொறுத்தவரை 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு என மூன்று விதமாக உள்ளன. இந்த மூன்று கிரேடு சிமெண்டு வகைகளும், கட்டுமான பணிக்கு தக்கவாறு பயன்படுத்தப்படுவது முக்கியம். உதாரணமாக, 53 கிரேடு சிமெண்டு என்பது சீக்கிரமாக ‘செட்’ ஆகும் தன்மை கொண்டது. கான்கிரீட் அமைக்கும் வேலைகளுக்கு இவ்வகை பொருத்தமாக இருக்கும். 43 கிரேடு வகை சிமெண்டு பூச்சு வேலைகளுக்கு சரியாக இருக்கும். சற்று மெதுவாக செய்யக்கூடிய வேலைகளுக்கு 33 கிரேடு சிமெண்டை பயன்படுத்தலாம். உடனடியாக வேலையை முடிக்க வேண்டும் என்ற நிலையில் 53 கிரேடு சிமெண்டு வகைகளை சுவர் பூச்சு வேலைகளுக்கு பயன்படுத்தினால், கட்டுமானத்தில் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. 

Next Story