வீடுகளுக்குள் குளிர்ச்சி தரும் வெப்பத்தடுப்பு முறை


வீடுகளுக்குள் குளிர்ச்சி தரும் வெப்பத்தடுப்பு முறை
x
தினத்தந்தி 27 May 2017 4:45 AM IST (Updated: 26 May 2017 3:57 PM IST)
t-max-icont-min-icon

வெயில் காலங்களில் பழைய கட்டிடங்கள் ‘குளுகுளுவென்று’ இருப்பதை பலரும் கவனித்திருக்கலாம்.

வெயில் காலங்களில் பழைய கட்டிடங்கள் ‘குளுகுளுவென்று’ இருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பழைய காலத்தில் கையாளப்பட்ட சுருக்கி என்ற, ‘வெதரிங் கோர்ஸ்’ முறைதான் அதற்கு காரணமாக உள்ளது. அது, இன்றைய சுருக்கியை விடவும் மாறுபட்ட செயல்முறையை கொண்டது.

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் குளிர்ச்சி தரும் ‘கூல் ரூப் பெயிண்டு’ வடிவத்தில் சுருக்கியை மாற்றியிருக்கின்றன. கட்டிடங்களின் மேல் தளம் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் ஆகியவற்றில் அந்த ‘கோட்டிங்’ முறையை பயன்படுத்தலாம். வெப்ப தடுப்பு முறைக்காக பூசப்படும் ‘கோட்டிங்குகளில்’ ‘செல்ப் அதெரிங் டெக்னாலஜி’, ‘அக்ரிலிக் பெயிண்டு’ மற்றும் ‘டி.பி.ஓ ரூபிங் சிஸ்டம்’ என்று பல வகைகள் இருக்கின்றன. மேற்கண்ட முறையை எவ்வாறு செய்வது என்பதை கவனிக்கலாம். அந்த முறை நான்கு விதமான செயல்பாடுகளை கொண்டது.

1. மாடியின் மேல்தளம் குப்பை, தூசி, தும்புகள் ஆகியவை இல்லாதவாறு தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, ஈரப்பதமில்லாமல் உலர வைக்கப்படும்.

2. முதலில் செய்யப்படுவது ‘பேஸ் கோட்’ என்ற ‘கூல் கார்டு பூச்சு’ ஆகும். அவை நன்றாக படியுமாறு பூசப்படுவதோடு, தேவைக்கேற்ப கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களிலும் அந்த ‘கோட்டிங்’ பூசப்படும்.

3. முதலாவது ‘கோட்டிங்’ நன்றாக காய்ந்த பிறகு, ‘டாப் கவர்’ என்று சொல்லப்படும் வெப்பத்தை பிரதிபலிக்கும் ‘கோட்டிங்’ பூசப்படும். இந்த வழிமுறையானது இரண்டு தடவைகள் செய்யப்படுவது வழக்கம். அதாவது முதலாவது கோட்டிங் பூசி, இரண்டு மணி நேரம் கழித்து, இரண்டாவது ‘ரிப்ளெக்ஸிவ் கோட்டிங்’ பூசப்படுகிறது.

4. பிறகு அவை அனைத்தும் நன்றாக உலர்ந்த பிறகு ஒரு வேதிப்பொருள் ‘பைனல் கோட்டிங்காக’ பூசப்படும். இதன் மூலம் முதல் இரண்டு ‘கோட்டிங்குகளும்’ உரிந்து வராதவாறு பாதுகாப்பது இந்த ‘கோட்டிங்கின்’ பங்காகும்.  

மேற்கண்ட பணிகளை செய்து தருவதற்கு மொத்த காண்ட்ராக்ட் அடிப்படையில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றை அணுகி நமது வேலையை எளிதாக செய்து கொள்ளலாம்.

Next Story