சமையலறை மற்றும் பாத்ரூம் அமைப்பை கவனியுங்க..


சமையலறை மற்றும் பாத்ரூம் அமைப்பை கவனியுங்க..
x
தினத்தந்தி 10 Jun 2017 5:30 AM IST (Updated: 9 Jun 2017 5:23 PM IST)
t-max-icont-min-icon

சமையலறைக்கு காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைப்பதுபோல பிளான் அளவிலேயே திட்டமிட வேண்டும்.

மையலறைக்கு காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைப்பதுபோல பிளான் அளவிலேயே திட்டமிட வேண்டும். மேலும், சமையலறையில் தாராளமான இடவசதி இருக்க வேண்டும். தற்போதைய வசதிகளை கணக்கில் கொண்டு மட்டும் சமையலறையை அமைக்கக்கூடாது. வசதிகள் அதிகரிக்கும்போது சமையலறை பொருட்கள் கூடுதலாக இடத்தை அடைத்துக்கொள்ளும். பிரிட்ஜ், கிரைண்டர், காஸ் சிலிண்டர், வாட்டர் டிஸ்பென்ஸர் என பல்வேறு பொருட்கள் சமையலறையில் இருக்க வேண்டும் என்பதால் அதற்கேற்ப முன்னரே திட்டமிடுவது அவசியம்.

பொதுவாக, கிராமப்புறம் அல்லது புற நகர் பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் அல்லது மனையில் போதுமான அளவுக்கும் மேல் இடவசதி கொண்டவர்கள் பாத்ரூமை வீட்டுக்கு வெளியே அமைக்கும் பட்சத்தில், மழைக்காலத்தில் பயன்படுத்துவது அல்லது வயதானவர்கள் பயன்படுத்துவதில் சிரமமாக இருக்கும். அவசரத்துக்கு பயன்படுத்துவதுபோல பாத்ரூம் வசதிகள் எளிமையாக இருக்க வேண்டும். அதனால், வீட்டுக்குள்ளும் ஒரு பாத்ரூம் அமைத்துக் கொள்ளலாம். குறிப்பாக, ‘இந்தியன் டைப்’ மற்றும் ‘வெஸ்டர்ன் டைப்’ என்று வசதிகளுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். 
1 More update

Next Story