கட்டமைப்புகளின் வலுவை அதிகரிக்கும் இரும்பு கம்பிகள்
பொதுவாக, கட்டுமானப்பணிகளில் அஸ்திவாரம் முதல் மேல் தளம் அமைப்பது வரையில் கான்கிரீட் உபயோகிக்கப்படுகிறது.
பொதுவாக, கட்டுமானப்பணிகளில் அஸ்திவாரம் முதல் மேல் தளம் அமைப்பது வரையில் கான்கிரீட் உபயோகிக்கப்படுகிறது. அதன் ஒவ்வொரு நிலையிலும் உள்ளீடாக கம்பிகள் அமைக்கப்பட்டிருக்கும். கான்கிரீட்டின் கொள்ளளவை அடிப்படையாக கொண்டு கம்பிகளை பயன்படுத்தி கூடு போன்ற அமைப்பு தயாரிக்கப்படும். இந்த பணியானது சென்டரிங் என்ற கம்பி கட்டும் பணி என்று சொல்லப்படும்.
அதிர்வுகள்
சொந்த வீட்டை கட்டுபவர்களுக்கு கம்பிகள் பற்றி பல சந்தேகங்கள் இருக்கும். மேலும் ஒரு சிலர் கம்பியின் நிறத்தை வெறும் கண்களால் பார்த்தே அதன் தரத்தை அறிந்து கொள்வார்கள். பொதுவாக, ஒரு அடி நீளம் கொண்ட கம்பியை கைகளில் பிடித்து கொண்டு அதன் மறுமுனையை தரையில் தட்டும்போது அதில் அதிர்வுகள் ஏற்படும்பட்சத்தில் அந்த கம்பியின் வகை தரமானது என சொல்லப்படுகிறது.
தரச்சான்றிதழ்
மேலும், இரும்பு கம்பிகள் வாங்கும்போது அதில் சோதனை செய்யப்பட்ட சான்றிதழ், ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ், கம்பியின் மேல் பதிக்கப்பட்ட தரத்திற்கான முத்திரை, பயன்பாட்டாளர்கள் மற்றும் கட்டிட பொறியாளர்களின் அங்கீகாரம் பெற்ற தயாரிப்பு ஆகிய விஷயங்களை கவனித்துக்கொள்ளவேண்டும்.
சுத்தம் வேண்டும்
எண்ணெய் பிசுக்கு, சேறு, மண், இதர பிசிறுகள் ஆகியவை கம்பிகளில் இல்லாமல், சுத்தம் செய்த பிறகு கட்டுமான பணிகளுக்கு கம்பிகளை பயன்படுத்த வேண்டும். இத்தகைய அசுத்தங்கள் காரணமாக பிணைப்பு வலுவாக இல்லாமல், கட்டிடத்தின் வலிமை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கட்டிடங்களின் ஸ்திரதன்மை அதிகரிக்கவும், நீண்ட ஆயுள் மற்றும் இயற்கை அழிவுகளிலிருந்து கட்டிடங்களை பாதுகாக்கவும், வேண்டுமெனில், கான்கிரீட்டுடன் வலிமையான பிணைப்பிற்கும் முறுக்கு கம்பிகள் பயன்படுகின்றன.
வளையும் திறன்
மேலும், கம்பிகளுக்கான மூலப்பொருள்கள் மற்றும் இரும்பு கழிவுகளை உருக்கி கம்பிகள் தயார் செய்யப்படுவதால், ஒவ்வொரு முறையும் கம்பிகளை கச்சிதமாக சோதித்தே பயன்படுத்த வேண்டும். மொத்த கம்பிகளில் இரண்டு அடி அளவுள்ள ஒரு துண்டு கம்பியை எடுத்து, அதன் நீட்டல், வளைவு திறன் ஆகியவற்றை சோதிக்கலாம். கம்பிகளை வளைக்கும் போது அதில் முறிவுகள் ஏற்படக் கூடாது. மேலும், கம்பிகளை சோதிக்க, ‘யுனிவர்சல் டெஸ்டிங் மிஷின்’ என்ற கருவி உள்ளது. இதன் மூலம் கம்பிகளின் குறுக்களவு, தாங்கும் திறன் உள்ளிட்ட தகவல்களை அறியமுடியும்.
வகைகள் மற்றும் வலிமை
1. ரவுண்டு கம்பிகளின் வலிமை சுமார் 250 N/mm 2
2. சாதாரண முறுக்கு கம்பிகளின் வலிமை சுமார் 400 N/mm2
3. டி.எம்.டி கம்பிகளின் வலிமை சுமார் 500 N/mm 2
முறுக்கு கம்பி மற்றும் டிஎம்டி கம்பி
முறுக்கு கம்பிகள் சி.டி.டி அதாவது ‘கோல்டு ட்விஸ்டடு டிபார்ம்டு’ என்ற முறையிலும்,
முறுக்காத கம்பிகள் டி.எம்.டி அதாவது ‘தெர்மோ மெக்கானிக்கல்லி ட்ரீட்டடு’ என்ற முறையிலும் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக, சி.டி.டி முறையில் தயாரிக்கப்படும் கம்பிகள் அவ்வளவாக பரிந்துரை செய்யப்படுவதில்லை. டி.எம்.டி முறையில் தயாரிக்கப்படும் கம்பிகள் வெப்ப குளிரூட்டு முறையில் சுமார் 1000 டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து 500 டிகிரி செல்சியஸ் வரை பதப்படுத்தப்படுவதால் குறைந்த கார்பன் அளவு கொண்டதாகவும், வலுவுடனும், துருவால் அவ்வளவாக பாதிக்கப்படாததாகவும் சொல்லப்படுகிறது.
பட்ஜெட் அளவு
கட்டுமான பணிகளுக்கான கம்பிகளின் அளவு, அதற்கான செலவு போன்றவை ஒவ்வொரு கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டிடத்திற்கான விதிமுறைகள் ஆகிய காரணங்களை பொறுத்து அமைகிறது. கட்டுமான பொறியாளர், கட்டிடக்கலை வல்லுனர், வடிவமைப்பு பொறியாளர் ஆகியோரை ஆலோசித்து தக்க முறையில் கம்பிகளை பயன்படுத்தும்போது பட்ஜெட் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
கம்பிகளின் கிரேடு
இந்திய தர நிர்ணய கழகம் கம்பிகளின் தரத்தை IS 1786/1985, TM Fe 415, Fe 500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது. கட்டிடங்களுக்கு Fe 415 தரம் கொண்ட கம்பிகளையாவது குறைந்தபட்சம் பயன்படுத்தப்படவேண்டும் என்றும் பொறியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. மேலும், வளர்ந்த நாடுகளில் கம்பிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வலிமை Fe 500 என்பது கவனிக்கத்தக்கது.

Related Tags :
Next Story