ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு உதவும் வழிகாட்டி மதிப்பு சீரமைப்பு
ஒரு சொத்து விற்கப்படும்போது அல்லது வாங்கப்படும்போது அதன் கிரய மதிப்பைக்காட்டிலும், அரசின் வழிகாட்டி மதிப்பை அடிப்படையாக வைத்துத்தான் பத்திர பதிவு அலுவலகங்களில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.
ஒரு சொத்து விற்கப்படும்போது அல்லது வாங்கப்படும்போது அதன் கிரய மதிப்பைக்காட்டிலும், அரசின் வழிகாட்டி மதிப்பை அடிப்படையாக வைத்துத்தான் பத்திர பதிவு அலுவலகங்களில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. முந்தைய வழிகாட்டி மதிப்பின்படி கணக்கிடப்படுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்த நிலையில், அவற்றை தீர்க்கும் விதமாக வழிகாட்டி மதிப்பை அரசு குறைத்துள்ளது.
வழிகாட்டி மதிப்பு அதிகரிப்பு
கடந்த 2007–08 காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி காரணமாக பத்திரப்பதிவு அதிகரித்து, நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பும் அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான மதிப்பை உயர்த்தி பதிவு செய்யப்படும்போது,
அருகில் உள்ள மற்ற இடங்களிலும் அதன் பாதிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தை மதிப்பு அதிகரித்ததன் விளைவு,
அரசின் வழிகாட்டி மதிப்பிலும் பிரதிபலித்தது. பரவலான பாதிப்பை ஏற்படுத்திய இவ்விஷயத்தில் அரசின் உதவியை பலரும் எதிர்நோக்கி இருந்தனர்.
பதிவு கட்டணம் உயர்வு
தற்போது அரசால் அமைக்கப்பட்ட மதிப்பீட்டு குழுவானது, நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டி அதாவது ‘கைடு லைன் வேல்யூ’–வை ஜூன் 9–ம் தேதி முதல் 33 சதவீத அளவுக்கு குறைத்து அறிவித்துள்ளது. அதன் விளைவாக பத்திர பதிவுகளுக்கான செலவுகளும் குறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், நிலம் விற்பனை, பரிமாற்றம், தானம், செட்டில்மென்ட் ஆகியவற்றின் பதிவு கட்டணம் ஒரு சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது அது 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புகள்
தற்போதுள்ள சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள், ரியல் எஸ்டேட் துறையின் மந்த நிலை, சந்தை வழிகாட்டி மதிப்பு ஆகிய காரணங்களால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. தற்போது அறிவித்துள்ள வழிகாட்டி மதிப்பு குறைப்பால் நிலம், வீடு வாங்குவோருக்கு பத்திரப்பதிவு கட்டணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 பதிவு மாவட்டங்கள்
சீரமைப்பு செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பானது தமிழகம் முழுவதும் உள்ள 50 பதிவு மாவட்டங்கள் உள்ளிட்ட, அனைத்து கிராம சர்வே எண்கள், தெருக்கள், நகரங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியதாகும். இவற்றை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை பொறுத்து, சீரமைக்கப்பட்ட சந்தை வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
புதிய மதிப்பு
ஆவண தாக்கல் நாளில் உள்ள வழிகாட்டி மதிப்புக்கு குறைவான மதிப்பில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், புதிய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஜூன் 9–ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு, அதற்கு முந்தைய பதிவை கருத்தில் கொண்டு பதிவு செய்யப்படுவதும் தவிர்க்கப்படும்.
பழைய மதிப்பு
கட்டிடங்களைப் பதிவு செய்யும்போது, நடைமுறையில் உள்ள பொதுப்பணித்துறை தள விலை பட்டியலின்படி மதிப்பை கடைபிடிக்க வேண்டும். மேலும் கடந்த ஜூன் 8–ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட, பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயத்துக்கு நிலுவையில் உள்ள ஆவணங்களுக்கு பழைய வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.
உடன்படிக்கை ஆவணம்
ஒரு சொத்து தொடர்பாக உடன்படிக்கை ஒப்பந்த ஆவணம் அமலில் இருக்கும்பட்சத்தில், அந்த சொத்தின் வழிகாட்டி மதிப்பு, சீரமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாக இருந்தால், உடன்படிக்கை ஆவணத்தில்
உள்ள மதிப்பையே சந்தை மதிப்பாக கொள்ளப்படும்.
எல்லாவற்றுக்கும் பொருந்தும்
புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வரும் முன்போ, பின்னரோ உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த ஆவணத்தில் உள்ள மதிப்பு கடைபிடிக்கப்படமாட்டாது. பொது அதிகாரம், கட்டுமான ஒப்பந்தம், திருத்தல் உள்ளிட்ட இதர ஆவணங்களின் பதிவுகளுக்கான பதிவு கட்டணத்தில் மாற்றங்கள் ஏதும் இல்லை. அதே நேரம், குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பானது பதிவுக்கு தாக்கலாகும் அனைத்து வகை ஆவணங்
களுக்கும் பொருந்தக்கூடியதாகும்.

Related Tags :
Next Story