கட்டுமான துறைக்கு புத்துயிர் அளிக்கும் புதிய அறிவிப்புகள்


கட்டுமான துறைக்கு புத்துயிர் அளிக்கும்  புதிய அறிவிப்புகள்
x
தினத்தந்தி 24 Jun 2017 12:00 AM GMT (Updated: 23 Jun 2017 1:06 PM GMT)

நகர்ப்புறங்கள் மற்றும் ஊர்ப்புறங்களில் குறிப்பிட்ட பரப்பளவுக்கு அதிகமாக கட்டுமானங்கள் அமைக்க, தற்போது வீட்டு வசதி துறையின் திட்ட அனுமதி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டிட அனுமதி ஆகியவை பெறவேண்டியதாக இருந்து வருகிறது.

 நகர்ப்புறங்கள் மற்றும் ஊர்ப்புறங்களில் குறிப்பிட்ட பரப்பளவுக்கு அதிகமாக கட்டுமானங்கள் அமைக்க, தற்போது வீட்டு வசதி துறையின் திட்ட அனுமதி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டிட அனுமதி ஆகியவை பெறவேண்டியதாக இருந்து வருகிறது. அதன் காரணமாக, பலருக்கும் வெவ்வேறு சிரமங்கள் ஏற்படுவதோடு, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் அரசின் கடனுதவிகளை பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிக்கல்களை தவிர்க்க, உரிய சட்ட திருத்தங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் அதிகரிக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. கட்டுமான துறைக்கு புத்துயிர் அளிக்கும் இந்த சீரமைப்பு திருத்தம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

* தற்போது உள்ளாட்சி அமைப்புகளால் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 4000 சதுர அடி வரையில் மட்டும் திட்ட அனுமதி அளிக்க அதிகாரம் இருக்கிறது. அந்த பரப்பளவை கூடுதலாக உயர்த்தி வழங்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப்பகிர்வு தரப்படும்.

* வணிகம் சார்ந்த கட்டிடங்களுக்கு 2000 சதுர அடி வரையில் திட்ட அனுமதி வழங்குவதற்கு மட்டும் தற்போது அதிகாரம் உள்ளது. இனிமேல், அந்த அளவும் அதிகரிக்கப்பட்டு, வணிகம், பொது, சிறப்பு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தக்க அதிகாரம் வழங்கப்படும்.

* தற்போது அதிகபட்சமாக 8 மனைகள் வரை மனைகளுக்கான உட்பிரிவு அனுமதி வழங்க சி.எம்.டி.ஏ எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல மற்ற நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கப்படும்.

*கட்டிடத்திற்கான வரைபட அனுமதி பெற இனிமேல் இணைய தளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப மனு அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்க தாமதமாகும் நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு நில உரிமையாளர் மற்றும் கட்டுனர்கள் கட்டுமான பணிகளை தொடங்கி செய்ய அனுமதி அளிக்கப்படும்.

இந்த அறிவிப்புகள் சொந்தமாக வீடு கட்டும் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் கட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story