பூமி பூஜைக்கு அவசியமான குறிப்புகள்


பூமி பூஜைக்கு அவசியமான குறிப்புகள்
x
தினத்தந்தி 29 July 2017 3:00 AM IST (Updated: 28 July 2017 3:55 PM IST)
t-max-icont-min-icon

ஒரு வருடத்தில் 8 முறைகள் மட்டும் வரும் வாஸ்து நாளில் பூமி பூஜை செய்ய இயலாத சூழலில், மாற்று நாட்களை தேர்ந்தெடுக்கும் விதிமுறைகள் பற்றி காணலாம்.

ரு வருடத்தில் 8 முறைகள் மட்டும் வரும் வாஸ்து நாளில் பூமி பூஜை செய்ய இயலாத சூழலில், மாற்று நாட்களை தேர்ந்தெடுக்கும் விதிமுறைகள் பற்றி காணலாம்.

* பொதுவாக, மனையின் உரிமையாளர் நட்சத்திரத்திற்கு உகந்த முகூர்த்த நாளில், வளர்பிறை சுப நேரத்தில் மனையின் பூமி பூஜை செய்யலாம்.

* பூஜை நாள் மனையின் உரிமையாளர் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தினமாக இருப்பது கூடாது.

* பூமி பூஜைக்கு வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி போன்ற மாதங்கள் உகந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன.

* புதன், வெள்ளி, வளர்பிறை திங்கள்கிழமை, வியாழன் ஆகிய கிழமைகளில் பூமி பூஜை மேற்கொள்ளலாம்.

Next Story