கீழ்த்தள கட்டமைப்பில் பின்பற்ற வேண்டிய விதிகள்


கீழ்த்தள  கட்டமைப்பில் பின்பற்ற  வேண்டிய  விதிகள்
x
தினத்தந்தி 26 Aug 2017 3:00 AM IST (Updated: 25 Aug 2017 3:06 PM IST)
t-max-icont-min-icon

தேசிய கட்டிட விதிமுறைகள் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், மாநில அளவில் கட்டிட விதிமுறைகள் வெவ்வேறு விதங்களாக கடைப்பிடிக்கப்படுகின்றன.

தேசிய கட்டிட விதிமுறைகள் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருந்தாலும், மாநில அளவில் கட்டிட விதிமுறைகள் வெவ்வேறு விதங்களாக கடைப்பிடிக்கப்படுகின்றன. பொதுவாக, தரைமட்ட அளவிலிருந்து, கீழ்புறத்தில் அமைக்கப்படும் ‘செல்லார்’ எனப்படும் கீழ்த்தளமானது வாகன நிறுத்தம் உள்ளிட்ட சில உபயோகங்களுக்காக பயன்படுகிறது.

பெரிய அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல அடுக்குகள் கொண்ட ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் கீழ்த்தளத்தை ‘பார்க்கிங் ஏரியாவாக’ அமைத்துக்கொள்வது வழக்கம். இப்போதுள்ள கட்டிட விதிகளின்படி, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஷாப்பிங் மால்களுக்கான கீழ்த்தளம் அமைக்கும்போது, தரைத்தளம் அதாவது சாலை மட்டத்தை விடவும் 1.2 மீட்டருக்கும் மேலான உயரத்தில் அமைக்கப்படுவது கூடாது.

மேலும், கீழ்த்தளத்தின் ‘சீலிங்’ சராசரி உயரத்தில் உள்ள ஒருவரது தலைக்கு மேல் குறைந்தபட்சம் 2.4 மீட்டர் உயரத்தில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டுமென்று விதிமுறைகள் இருக்கின்றன. எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் சமயங்களில் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கும், இதர விபத்து கருவிகளை இயக்குவதற்கும் போதுமான இடம் கீழ்த்தளத்தில் இருப்பது அவசியம். கீழ்த்தள அமைப்பில் இரண்டாவது தளம் அமைக்கும் அவசியம் உள்ளபோது, போதுமான வெளிச்சமும், காற்றோட்ட வசதிகளும் அவசியம் இருக்கவேண்டும். மேலும், தீ விபத்து தடுப்பு விதிமுறைகளையும் கச்சிதமாக பின்பற்றுவது மிக முக்கியமானது.

தேசிய கட்டிட விதி முறைகளின்படி, அனைத்து நகர்ப்புற கட்டிட அமைப்புகளும் வடிவாக்கம் செய்யப்படுகின்றன. அதன் அடிப்படையில் அடித்தளமானது பொருட்கள் வைப்பதற்கான அறை, வங்கிகளின் பணத்தை வைக்கும் அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், குளிர்பதனம் செய்ய உதவும் இயந்திரங்கள் அமைப்பது ஆகியவற்றுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் குடியிருப்பதற்கான இடமாக அவற்றை பயன்படுத்த அனுமதி முற்றிலும் கிடையாது. பாதாள சாக்கடை அமைப்பதற்கான விதிமுறைகள் அனுமதிக்கும் பட்சத்தில் சமையல் அறைகள் மற்றும் குளிப்பதற்கான அறைகளை அமைத்துக்கொள்ளலாம்.

Next Story