நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த அதிசய கட்டிடங்கள்


நவீன  தொழில்நுட்பத்தில்  அமைந்த  அதிசய  கட்டிடங்கள்
x
தினத்தந்தி 25 Aug 2017 9:45 PM GMT (Updated: 25 Aug 2017 9:38 AM GMT)

தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு, கட்டிட அமைப்பு கலையும் இணைந்து ஏற்படுத்தும் வளர்ச்சிகள் பல புதுமைகளை படைக்கின்றன.

தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு, கட்டிட அமைப்பு கலையும் இணைந்து ஏற்படுத்தும் வளர்ச்சிகள் பல புதுமைகளை படைக்கின்றன. அதன் காரணமாக பல்வேறு பிரமாண்டமான கட்டமைப்புகள் உலகெங்கும் விண்ணை தொடும்படி நிற்கின்றன. அதன் அடிப்படையில் உலக நாடுகளில் ஆங்காங்கே அமைக்கப்படும் வித்தியாசமான கட்டிடங்கள் நமது கவனத்தை கவருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

லக்கி காயின் கட்டிடம்

இந்த கட்டிடம் சீனாவின் குவாங்கோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கட்டிடம் ஆகும். அதிர்ஷ்டத்தை குறிக்கும் விதமாக லக்கி காயின்   (றீuநீளீஹ் நீஷீவீஸீ)   என்று அதன் உரிமையாளர்களால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் 33 மாடிகளோடு, 138 மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் 47 மீட்டர் அகலம் கொண்ட பெரும் துளை அமைப்பு உள்ளது. இக்கட்டிடத்தின் வடிவம் பழைய சீன பண்பாட்டில் பயன்படுத்திய தண்ணீரை இறைக்கும் சக்கரத்தை குறிப்பதாகும். அதன் காரணமாக அதிர்ஷ்டத்தை வரவேற்கும் நல்ல பெங்–சூயி சக்திகளை ஈர்க்கும் சக்தியை அந்த கட்டிடம் பெறும் என்பது பண்பாட்டு ரீதியான நம்பிக்கை என்று அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன நாட்டின் கட்டிட வடிவமைப்பியல் கல்லூரி இதன் கட்டுமான அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

 கேபிடல் கேட் கோபுரம்


ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் உள்ள இந்த கட்டிட அமைப்புக்கு ‘அபுதாபியின் சாயும் கோபுரம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘கேபிடல் கேட்’ என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் 165 மீட்டர் உயரமும் 35 மாடிகள் கொண்டதாகவும் உள்ளது. கட்டுமான தொழில்நுட்ப அதிசயமாக ஒட்டு மொத்த கட்டமைப்பும் 18 டிகிரி சாய்வாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ‘கேபிடல் கேட்’ ‘மனிதன் கட்டிய கோபுரங்களில் மிகவும் சாய்வானது’ என்று கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

490 பில்லர்கள் 20 முதல் 30 மீட்டர்கள் ஆழம் கொண்டதாக அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ப்ரீகேம்பர்டு கோர்’   (றிக்ஷீமீநீணீனீதீமீக்ஷீமீபீ நீஷீக்ஷீமீ  ) என்ற நவீன கட்டுமான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இக்கட்டிடம் சாய்ந்து விழாமல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பைசா நகரத்து சாயும் கோபுரத்தைவிட இக்கட்டிடம், நான்கரை மடங்கு அதிக சாய்வு தன்மை கொண்டதாகும். இந்த கட்டிட அமைப்பில் ஐந்து நட்சத்திர விடுதி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

பியானோ வீடு

சீனாவில் உள்ள ‌ஷன்னான் மாவட்டத்தின் ஹொய்னான் நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு பிரமாண்ட பியானோ வடிவில் 2007–ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். ஆனால், பியானோவுக்கும் வீட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது சுவாரசியமானது. கட்டிட வடிவமைப்பாளர்கள் தங்களது ‘பிளான்களை’ மக்கள் பார்வைக்கு வைப்பதற்கு இக்கட்டிடத்தை பயன்படுத்துகின்றனர்.

வழக்கமான பியானோ அளவை விடவும் கிட்டத்தட்ட 50 மடங்கு பெரியதாக இருப்பதுபோல இந்த கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பியானோ வடிவ வீடானது இரவில் மின்னும்படி பல்வேறு வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு கண்களை கவருவதாக உள்ளது.

Next Story