கட்டிட உறுதிக்கு உறுதுணையாகும் இரும்பு கம்பிகள்
டி.எம்.டி பார் என்று இரும்பு கம்பிகள் அழைக்கப்படுவதை அனைவரும் அறிந்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம்..? என்பதை சிலரே அறிந்திருப்பார்கள்.
டி.எம்.டி பார் என்று இரும்பு கம்பிகள் அழைக்கப்படுவதை அனைவரும் அறிந்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம்..? என்பதை சிலரே அறிந்திருப்பார்கள். ‘தெர்மோ மெக்கானிகலி டிரீட்டடு ஸ்டீல்’ என்பதே டி.எம்.டி என்பதற்கான முழு விரிவாக்கமாகும். வெப்பம் மற்றும் இயந்திரங்களின் மூலமாக தக்க முறையில் பக்குவப்படுத்தப்பட்ட இரும்பு கம்பி என்பது அதற்கான விளக்கமாகும்.
உருக்கு ஆலை
மேற்கண்ட செயல்முறையின் காரணமாக, தேவைப்படும் அளவுக்கு வளைக்கவோ அல்லது அளவுகளுக்கேற்ப துண்டித்து, வெல்டிங் செய்வதற்கோ தகுந்த உறுதி பெற்றவையாக இவ்வகை கம்பிகள் இருக்கின்றன. வழக்கமாக, இரும்பு உருக்கு ஆலைகளில் குழம்பு போன்ற நிலையில் இரும்பை உருக்கி, அதை கம்பிகளாக வார்த்தெடுப்பார்கள். அவற்றை மேலும், அழுத்தத்துக்கு உள்ளாக்கி அவற்றின் குறுக்கு அளவை தேவைகளுக்கு தக்கவாறு மாற்றி அமைப்பார்கள்.
தண்ணீரில் அமிழ்த்தப்படும்
கொதிநிலையில் உள்ள அந்த கம்பிகளை டி.எம்.டி செயல் முறைப்படி வெளிப்புறத்தில் தண்ணீர் கொண்டு குளிர்விக்கப்படும். கொதிக்கும் இரும்பு கம்பிகள் தண்ணீரில் அமிழ்த்தப்படும்போது அதன் மேற்புற வெப்பநிலை உடனடியாக குறைந்து இறுக்கமாக மாறுகின்றன. ஆனால், அவற்றின் உள்புறத்தில் உள்ள குழம்பின் வெப்பநிலை அவ்வளவு எளிதாக குளிர்வதில்லை.
வெப்ப மாறுபாடு
அதன் பிறகு, மேலும் தண்ணீருக்குள் கம்பிகளை முழ்க வைத்து, வெளியில் எடுப்பார்கள். அதன் காரணமாக கம்பிகளின் மேற்புறம் திடமாகவும், உள்புறம் இளகிய தன்மையுடனும், சற்று வெப்ப நிலை கொண்டதாகவும் இருக்கும். கம்பிகளின் வெளிப்புற வெப்பத்துக்கும், உள்புற வெப்பத்துக்கும் இருக்கும் வித்தியாசம் காரணமாக வெப்பம் உள்ளிருந்து வெளியில் பரவும். அதன் காரணமாகவும், கம்பிகள் கூடுதல் உறுதியை பெறுகின்றன. இந்த நடைமுறைகளின் விளைவாக, அவற்றை வேண்டிய அளவுகளில் எளிதாக வெட்டவோ அல்லது உடையாமல் வளைக்கவோ இயலும்.

Related Tags :
Next Story