கண்களை கவரும் மாடிப்படிகள்


கண்களை  கவரும்  மாடிப்படிகள்
x
தினத்தந்தி 25 Aug 2017 9:30 PM GMT (Updated: 25 Aug 2017 9:54 AM GMT)

மாடிப்படிகள் உள் அலங்கார முறைப்படி அமைக்கப்பட்டாலும், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் ஆகியோர்களது பாதுகாப்பு மற்றும் சவுகரியம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு அமைக்கப்படுவது வழக்கம்.

மாடிப்படிகள் உள் அலங்கார முறைப்படி அமைக்கப்பட்டாலும், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் ஆகியோர்களது பாதுகாப்பு மற்றும் சவுகரியம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு அமைக்கப்படுவது வழக்கம். படிக்கட்டுகளின் சாய்மானம் 25 டிகிரி முதல் 40 டிகிரி என்ற அளவிலும், படிக்கட்டுகள் அகலம் குறைந்த பட்சம் மூன்று அடியாவது இருக்கவேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் வரையறுத்துள்ளனர்.

அமைப்புகள்


படிக்கட்டுகளில் வளைவான அமைப்பு, நேரான அமைப்பு, மிதப்பது போன்ற (கேண்டிலிவர்) அமைப்பு, சுழலும் வகையிலான அமைப்பு என்று பல வகைகள் உள்ளன. திருப்பங்கள் இல்லாமல், உயர்ந்து செல்லும் ஒரே அமைப்பாக படிக்கட்டுகள் இருந்தால் ஏறுவதற்கு சிரமமாக இருக்கும். சுழல் படிக்கட்டுகள் மற்றும் வளைவு படிக்கட்டுகள் ஆகியவை வரவேற்பறையில் பிரதானமாக அமைக்கப்பட்டால் அழகாக இருக்கும்.

கைப்பிடிகள்


மாடிப்படிகளை கிரானைட் கற்கள், மரம் அல்லது இதர கற்களால் அமைக்கும்போது அவை வழுக்காமல் இருப்பதோடு, உறுதியாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பளிங்கு கற்களால் அமைக்கும் படிக்கட்டுகள் எடுப்பான தோற்றம் தரும். பொதுவாக, படிக்கட்டுகள் ஒரு பக்கம் சுவர் மற்றொரு பக்கம் கைப்பிடியுடன் கூடிய தடுப்புகளோடு அமைக்கப்பட்டிருக்கும்.

அழகை கூட்டலாம்

வளைவாக அமைக்கப்பட்ட மாடிப்படிகளின் பக்கவாட்டில் ‘ஆர்ச்’ போன்ற பெரிய ஜன்னல்கள் அமைக்கப்பட்டால் அழகாக இருக்கும். மாடிப்படிகளில் மற்றும் மாடிப்படிகளின் பக்க சுவர்களில் தக்க அளவிலான அலங்கார விளக்குகள் அமைத்து அழகை கூட்டலாம். படிகளின் நிறத்துக்கேற்ற வேலைப்பாடுகள் கொண்ட ‘கார்பெட்டுகள்’ விரித்தால் படிகள் மனம் கவருவதாக இருக்கும்.

Next Story
  • chat