அடுக்குமாடி வீடு வாங்க அவசியமான ஆவணங்கள்


அடுக்குமாடி  வீடு  வாங்க அவசியமான  ஆவணங்கள்
x
தினத்தந்தி 26 Aug 2017 3:30 AM IST (Updated: 25 Aug 2017 3:52 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் மற்றும் வடிகால் துறைகளின் குழாய் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே பதிக்கப்பட்டுள்ளது என்ற வரைபடம்.

1. கட்டிட வரைபடம், திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி

 2. சென்னை மாநகர் வளர்ச்சி குழுமத்திற்கு செலுத்திய கட்டண ரசீது

 3. சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட்ட கட்டிட வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புள்ள கட்டண ரசீது மற்றும் நிலத்தின் ஆவணங்கள்

 4. தாய் பத்திரம் மற்றும் அதற்கான வில்லங்க சான்றிதழ்

 5. மின்சாரம் மற்றும் குடிநீர் வடிகால் துறைகளின் கட்டண ரசீது

 6. வீட்டுக்கான ஸ்ட்ரக்சுரல் வரைபடம்

 7. கட்டிட வரைபடம் 

 8. மின்சார அமைப்புகளுக்கான வரைபடம் 

 9. கட்டிடத்தின் வலிமையை உறுதி செய்யும் தர நிர்ணய சான்றிதழ்

 10. குடிநீர் மற்றும் வடிகால் துறைகளின் குழாய் இணைப்புகள் தெருவின் எந்த முனைகளில் இருந்து எத்தனை அடி கீழே பதிக்கப்பட்டுள்ளது என்ற வரைபடம்

 11. கட்டுமான அமைப்பில் கார் நிறுத்தும் இடம் எவ்வளவு, அதன் அளவு, மற்றும் எண் மற்றும் வரைபடம்

 12. வீடுகளில் உள்ள லிப்ட், மோட்டார், சி.சி.டி.வி கேமரா, சோலார் பவர் ஹீட்டர், அவற்றிற்குரிய பில் மற்றும் வாரண்டி கார்டு மற்றும் சம்பந்தப்பட்ட உபகரணங்களின் பழுதை நீக்கும் மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் சென்டர் தொலைபேசி எண்கள்.

Next Story