குடியிருப்புகளில் பயன்படும் தண்ணீர் குழாய் வகைகள்


குடியிருப்புகளில் பயன்படும் தண்ணீர் குழாய் வகைகள்
x
தினத்தந்தி 26 Aug 2017 3:30 AM IST (Updated: 25 Aug 2017 3:55 PM IST)
t-max-icont-min-icon

பொதுவாக, சிமெண்டு மற்றும் இரும்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட குழாய்கள் குடியிருப்புகளின் தண்ணீர் பயன்பாட்டிற்கென பயன்படுத்தப்பட்டு வந்தது.

பொதுவாக, சிமெண்டு மற்றும் இரும்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட குழாய்கள் குடியிருப்புகளின் தண்ணீர் பயன்பாட்டிற்கென பயன்படுத்தப்பட்டு வந்தது. நவீன வளர்ச்சிகள் காரணமாக. பிளாஸ்டிக் உபயோகம் நடைமுறைக்கு வந்தவுடன் வீடுகளில் புழங்கும் குழாய் அமைப்புகளில் அவற்றின் பங்கு தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. காரணம், பிளாஸ்டிக் பைப் வகைகள் துருப்பிடிக்கும் தன்மை இல்லாமலும், எடை குறைவாகவும், வளையக்கூடிய விதத்திலும் உள்ளதால் பொருத்துவதற்கு எளிதாக இருக்கும். அவற்றின் நான்கு வகைகள் :

1.    ‘பி.வி.சி’, ‘சி.பி.வி.சி’, ‘யு.பி.வி.சி’ என மூன்று வித பிளாஸ்டிக் குழாய்கள்

2.    ‘பெக்ஸ்’ (கிராஸ் லிங்க்டு பாலியூரித்தீன்) வகை குழாய்கள்

3.    ‘காஸ்ட் அயர்ன்’ மற்றும் ‘கால்வனைஸ்டு அயர்ன்’ எனப்படும் இரும்பு குழாய்கள்

4.    சிமெண்டு குழாய்கள்.

சமையலறை ‘பைப் பிட்டிங்குகள்’

பாத்திரங்களை கழுவும் ‘சிங்க்’ குழாய், ‘வாஷ் பேசின்’ மற்றும் குடிநீர் வரும் குழாய் ஆகியன சமையலறையில் இருப்பவையாகும். சுவருக்கு உட்புறமாக சரியான முறையில் கெட்டியான ‘பைப்’ கொண்டு அவற்றை பொருத்துவது முக்கியம். நீரின் உபயோகம் அதிகமாக இருக்கும் இடங்களில் சமயலறை முதலில் இருப்பதால் ‘பைப் ஜாயிண்டுகளில்’ கவனம் செலுத்துவது முக்கியம்.

குடிநீருக்கான குழாய் அமைப்புகள்

வெளிப்புறம் சாலையில் இருக்கும் குழாயிலிருந்து வீட்டின் கீழ்நிலை தொட்டிக்கு வரும் ‘பைப் கனெக்‌ஷன்’ மற்றும் ‘போர்வெல்’ மூலம் எடுக்கப்படும் தண்ணீருக்கான குழாய்கள் ஆகிய இரண்டு வகையில் குடி தண்ணீருக்கான ‘பைப் செட்டிங்குகள்’ இருக்கின்றன. குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ‘யு.பி.வி.சி’ பைப்புகள் பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. பயன்பாட்டின் காரணமாக பழுது நேர்ந்தால் அப்பகுதியை நீக்கி விட்டு வேறு குழாயை ‘கப்ளர்கள்’ கொண்டு குறைந்த செலவில் எளிதாக இணைத்து விடலாம். ‘போர்வெல்’ அல்லது கீழ்நிலை தொட்டியிலிருந்து தண்ணீரை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடிய மின் மோட்டாரை தக்க இடத்தில் பொருத்துவதோடு, குழாய்களை இணைக்கும் ‘சேம்பர்’ அமைப்பையும் தரையில் பாதுகாப்பாக கட்டமைக்க வேண்டும்.

குளியலறை மற்றும் கழிவறை குழாய்கள்

வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீருக்கான குழாய்களை குளியலறையில் சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நீர் வெளியே செல்வதற்கான குழாயின் மேற்புறம் ‘பில்டர்’அமைப்பு பொருத்தப்படுவது முக்கியம். குளியலறையில் தண்ணீர் எளிதில் வடிந்து செல்லக்கூடிய வகையில் தரை தளம் தகுந்த வாட்டத்துடன் அமைந்திருக்க வேண்டும். குளியலறையில் அமைக்கப்படும் ‘பைப் பிட்டிங்குகள்’ நல்ல தரமான கம்பெனியின் தயாரிப்புகளாக இருந்தால் அடிக்கடி ரிப்பேர் ஆகாமல் இருக்கும்.

Next Story