வீடுகளில் அமைக்கப்படும் தானியங்கி தொழில்நுட்பங்கள்


வீடுகளில்  அமைக்கப்படும் தானியங்கி  தொழில்நுட்பங்கள்
x
தினத்தந்தி 25 Aug 2017 10:15 PM GMT (Updated: 25 Aug 2017 10:28 AM GMT)

பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது இன்றைய நாகரிக வளர்ச்சியில் தவிர்க்க இயலாத மாற்றமாக உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவது இன்றைய நாகரிக வளர்ச்சியில் தவிர்க்க இயலாத மாற்றமாக உள்ளது. அத்தகைய மாற்றங்களில் முக்கியமான ஒன்றாக கட்டுமானத்துறையில், ‘ஸ்மார்ட் ஹோம்ஸ்’ எனப்படும் தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட வீடுகள் வடிவமைப்பு இருக்கிறது. மேலும், நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக இந்த தொழில் நுட்பத்தை நோக்கி பலரும் ஈர்க்கப்படுவதால், வரும் ஆண்டுகளில் இந்த தொழில் நுட்பம் மேலும், வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரணம், வீடுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அனைவரும் கவனம் செலுத்துகின்றனர்.

பெரு நகரங்களில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் தானியங்கி வசதிகள் இருக்கும் வீடுகளையே பலரும் வாங்க விரும்புகின்றனர். தற்போது குடியிருக்கும் வீட்டில் தானியங்கி அம்சங்களை அமைத்துக்கொள்ள பலர் விரும்புகின்றனர். இன்றைய நகர்ப்புற பொருளாதார சூழலில், தங்களது வீட்டை மக்கள் பாதுகாப்பதற்கு, நிலையான தொழில் நுட்பத்தை விரும்புகிறார்கள். மனிதர்களை விடவும் ‘கேட்ஜெட்’ வகையிலான பாதுகாப்பு நம்ப தகுந்த விதத்தில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். அத்தகைய தொழில் நுட்பம் பற்றிய சில தகவல்களை காணலாம்.   

* இந்த தொழில் நுட்பம் மூலம் வீட்டில் உள்ள மின்சார இணைப்புகள், அவற்றின் செயல்பாடுகள், வசதிகள் என அனைத்தையும் ‘ஸ்மார்ட் போன்’ அல்லது கம்ப்யூட்டரிலிருந்து செயல்படுத்த இயலும்.

* பல்வேறு முக்கியமான பெருநகரங்களில் கட்டுனர்கள் அவர்களது குடியிருப்பு திட்டங்களில் தானியங்கி வசதி கொண்ட வீடுகளை அமைக்க தொடங்கியுள்ளார்கள்.

* வீட்டு உரிமையாளரது குரலை உணர்ந்து கதவுகள் மற்றும் உட்புற அமைப்புகளை செயல்படுத்தும் தொழில்நுட்பமும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* மேலும், மின்சார விளக்குகள், ஜன்னல், கதவுகள் போன்றவற்றையும் வெளிப்புறம் இருந்தே இயக்கலாம். அதாவது, ‘மைக்ரோ வேவ் அவன்’ இயக்கத்தை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே இயக்கி சூடாக இருக்கும்படி செய்யலாம்.

* அலாரம் அமைப்புகள் இருப்பதால் பல நாட்கள் வெளியில் செல்ல வேண்டியிருப்பினும் பயமில்லாமல் செல்லலாம். பிரிட்ஜை இயங்க வைக்கலாம் அல்லது அணைத்து வைக்கலாம்.

* வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் அல்லது ‘போன்சாய்’ மர வகைகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.

Next Story