உங்கள் முகவரி

உறைவிடம் மற்றும் குடியிருப்புகளுக்கான புதிய கொள்கை + "||" + Lodging and Apartments for New policy

உறைவிடம் மற்றும் குடியிருப்புகளுக்கான புதிய கொள்கை

உறைவிடம்  மற்றும்  குடியிருப்புகளுக்கான  புதிய  கொள்கை
குடியிருப்புகள் மற்றும் உறைவிடங்களுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் அரசு அறிவித்துள்ளது.
குடியிருப்புகள் மற்றும் உறைவிடங்களுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் அரசு அறிவித்துள்ளது. அதன்படி வசிப்பதற்கான வீடுகள் அமைக்கும் செலவுகளை குறைத்தல், பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் குறைந்த வருவாய் கொண்ட பிரிவினரை உள்ளடக்கிய அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வீட்டு வசதி கிடைக்கும்படி செய்தல், வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட வீடுகளை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளுடன் கூடிய வீடு வழங்கும் முறையை உருவாக்குதல் போன்றவை இந்த உறைவிட கொள்கையின் சிறப்பு அம்சங்களாகும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான நிதி, சிறப்பு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமை சான்றிதழ் மூலம் திரட்டப்படும் நிதி, பயனாளிகளின் பங்களிப்பு தொகை மற்றும் தமிழக அரசால் தரப்படும் பற்றாக்குறை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு வீடுகள் அமைத்து தரப்படும்.

பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் தனி வீடுகள் கட்டப்படும். மேலும், நடப்பு ஆண்டில் பயனாளிகள் பங்களிப்புடன் வாங்கும் திறனுக்குட்பட்ட வீடுகள் கட்டும் வகைப்பாட்டின் கீழ் குறைந்த செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். மேற்கண்ட இரண்டு வகைப்பாட்டின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு மாநில அரசு குறிப்பிட்ட அளவு மானியமும் அளிக்கிறது.