மனதை கவரும் வீட்டின் வெளிப்புற அமைப்புகள்


மனதை  கவரும்  வீட்டின் வெளிப்புற  அமைப்புகள்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:00 AM IST (Updated: 8 Sept 2017 5:52 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்கள் அனைவரது மனதையும் கவருவதாக அமைந்துள்ளன.

னைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்கள் அனைவரது மனதையும் கவருவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, கட்டுமான துறையில் அமைக்கப்படும் கட்டிட எலிவே‌ஷன், போர்டிகோ, காம்பவுண்டு அமைப்பு மற்றும் படிக்கட்டுகள் போன்ற வெளிப்புற அமைப்புகளை அனைவரும் விரும்பும் வகையில் விதவிதமான டிசைன்கள் மூலம் அழகுபடுத்த

முடியும். கணினி முறையிலான வடிவமைப்பு மூலமும் வீடுகளின் வெளிப்புறத்தை அலங்கரிக்கலாம். இப்போது பல்வேறு வகைகளில் எலிவே‌ஷன் டைல்ஸ்கள் சந்தையில் கிடைக்கின்றன. வீடுகளின் உள்ளலங்காரத்துக்கு இணையாக வெளிப்புற அலங்காரத்தையும் அமைக்கும் முறை இப்போது பரவலாகி வருகிறது.

அழகான போர்டிகோ

நூற்றுக்கணக்கான டிசைன் டைல்ஸ் மூலம் போர்டிகோவில் உள்ள பில்லர்களை அழகாக வண்ணமயமாக மாற்றலாம். மேலும், படிக்கட்டுகளுக்கான கைப்பிடிகள் இதர கட்டமைப்புகளுக்கு பொருந்தும் வகையில் கச்சிதமாக அமைக்கப்படுகிறது. சமீப காலங்களில் மேல்மாடி கூரைகளில் பதிக்கும் ஓடுகளும் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.

மேல்மாடி கிரில்கள்

மேல்மாடியில் அமைக்கப்படும் கிரில்கள் வழக்கமான முறையில் இல்லாமல் பல்வேறு மாடல்களிலும், வண்ணங்களிலும் அமைத்து வீட்டின் தோற்றத்தை மேம்படுத்தலாம். மாடிப்படிக்கான கைப்பிடிகள் கான்கிரீட் மூலம் அமைப்பதா..? இரும்பு அல்லது அலுமினிய அமைப்பாக பொருத்துவதா..? என்பதை வீடு கட்டும் முன்னரே முடிவு செய்து, அதற்கான டிசைன் வகைகளை தேர்வு செய்து வைத்துக்கொண்டால் பணிகள் எளிதாக முடியும்.

மாடர்ன் வீடுகள்

வீடுகளின் வெளிப்புறம் பதிக்கும் சாதாரண ஓடுகளில் அழகான இயற்கை காட்சிகளை வரைந்து வித்தியாசம் காட்டலாம். 10–க்கும் மேற்பட்ட நிறங்கள் கொண்ட கலவைகளை வெளிப்புற சுவர்கள் அல்லது டைல்ஸ் வகைகளுக்கு மேலாக பூசியும் அழகு செய்யலாம். வழக்கமான இன்டீரியர் அலங்காரத்துக்கு அளிக்கப்படும் கவனத்தை வெளிப்புற டிசைன்களில் செலுத்தும்போது, எளிய வீடுகளும் அட்டகாசமான தோற்றத்துக்கு மாறி விடுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உள் அலங்காரத்தை விட வீட்டின் வெளி அலங்காரத்தில் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வெளிப்புற டிசைன்கள்

பிளாட்டுகளை அவுட்சைடு டிசைன்களை பார்த்து மக்கள் விரும்புவதாக அறியப்பட்டுள்ளது. அடுக்குமாடிகள் மற்றும் வணிக, வர்த்தக மையங்களின் வெளிப்புற கதவுகள் அலுமினியம், இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றால் அமைக்கப்படுகின்றன. எதிர்பாராத விதத்தில் வெளிப்புறம் ஏற்படும் தீ விபத்துகள் காரணமாக அறைக்குள் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும் வகையிலும் தீ தடுப்பு கதவுகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

வல்லுனர்கள் கருத்து

மேற்கண்ட வெளிப்புற வடிவமைப்புகள் காரணமாக வீடுகளுக்கு ஆகும் மொத்த செலவில் 20 முதல் 30 சதவீத அளவு கூடுதல் ஆகலாம். சந்தை மதிப்பில் வீடுகளின் வெளிப்புற தோற்றம் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் முன்னர் பலரும் அவற்றின் வெளிப்புற அழகு மற்றும் அமைப்பில் கவனம் செலுத்துவதாகவும் ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Next Story