அறையை அலங்கரிக்கும் நவீன அலமாரிகள்
வீட்டு அலங்கார அமைப்பின் முக்கியமாக பகுதியாக கருதப்படும் ‘வார்ட்ரோப்’ அமைப்புகளில் நிபுணர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம்.
இல்லங்களில் உள்ள கட்டமைப்புகள் அல்லது உள் அலங்கார பொருட்கள் ஆகியவை குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அதே சமயத்தில், அறையின் அழகை எடுப்பாக காட்டுவதாகவும் இருப்பது சிறந்தது. கைதேர்ந்த உள் அலங்கார நிபுணர்கள் இந்த விஷயத்தை மனதில் கொண்டுதான் இல்லங்களை அழகு படுத்துகின்றனர்.
மர வார்ட்ரோப்
வீட்டு அலங்கார அமைப்பின் முக்கியமாக பகுதியாக கருதப்படும் ‘வார்ட்ரோப்’ அமைப்புகளில் நிபுணர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம். இப்போதைய டிரெண்டு என்ற நிலையில், சுவர் முழுவதும் பரவலாக மரத்தால் அமைக்கப்பட்ட பீரோ போன்ற அமைப்புகளை பலரும் விரும்புகிறார்கள். சுவரின் ஒரு பக்கம் முழுவதும் மேற்பகுதி முதல் கீழ்ப்பகுதி வரையில் ‘வார்ட்ரோப்’ அமைத்து, அதன் மேல் பகுதி முழுவதும் முக்கியமான பொருட்களை வைக்கும்படி ‘பீரோ’ போன்றும் பயன்படுத்தலாம். தனித்தனி அறைகள் போன்று அவற்றில் சிலவற்றை அமைத்துக்கொண்டால், வேண்டிய பாகங்களை திறந்து மூட வசதியாக இருக்கும். அறையின் ஒரு பக்கம் முழுவதும் அலங்காரமாக இருக்கும்.
ஆடைகள் பாதுகாப்பு
டிரஸ்ஸிங் டேபிள் எப்போதும் சுவர் அலமாரிக்கு நடுவில் அமைத்து கொள்வது பல இடங்களில் உள்ளது. அதன் கீழ்ப்புறம் அறைகள் அமைத்து அலங்கார பொருட்களை வைத்துக்கொள்ளலாம். தற்போது அமைக்கப்படும் அனைத்து அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் ‘வார்ட்ரோப்’ அமைப்புகளுக்கு தக்க இடம் விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறையின் அளவு சிறியது அல்லது பெரியது என்ற பாகுபாடில்லாமல் ‘வார்ட் ரோப்’ மற்றும் ‘லாப்ட்’ அமைப்புகள் வீடுகளுக்கு அவசியமானது. அதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களின் ஆடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பத்திரமாக பராமரிக்க இயலும். அலமாரிகளின் அளவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து, உள் அறைகளில் ஆடைகளை சுலபமாக அடுக்கி வைக்கலாம்.

Related Tags :
Next Story