வெளியூர் பயணத்தின்போது வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேலாக வெளியூர் செல்லும்போது வீடுகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம் என்று கட்டுமான நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மேலாக வெளியூர் செல்லும்போது வீடுகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம் என்று கட்டுமான நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த ஏற்பாடுகள் மூலம் பல சங்கடங்கள் முன்னதாகவே தவிர்க்கப்படுகிறது. அவ்வாறு குடும்பத்துடன் சில நாட்கள் வெளியூர் பிரயாணம் செல்லும் தருணங்களில் நம்மால் கடைப்பிடிக்கப்படவேண்டிய குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.
தண்ணீர் குழாய்கள்
முதலாவதாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தண்ணீர் குழாய்கள் அனைத்தும் சரியாக அடைக்கப்பட்டிருக்கிறதா..? என்பதாகும். மேலும், ஒட்டு மொத்தமாக தண்ணீர் சப்ளை வரக்கூடிய குழாயின் கேட் வால்வை அடைத்து விட்டு செல்வது இன்னும் பாதுகாப்பானது. அதன் மூலம் ‘வாட்டர் ஓவர் புளோ’ பிரச்சினைகள் வராமல் தவிர்க்கப்படும்.
சமையல் எரிவாயு
சமையலுக்கு பயன்படும் கேஸ் சப்ளை குழாய் மூலம் அல்லது நேரடியாக சிலிண்டர் மூலம் பெறப்படுவதாக இருந்தாலும், முற்றிலும் அதன் இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. அதன்மூலம் குறிப்பிட்ட அளவு கேஸ் வீணாவது தடுக்கப்படுவதோடு, அதன் வாசனையும் சமையலறையில் ஏற்படாமல் தடுக்கப்படும்.
மின்சார இணைப்புகள்
அறைகளின் விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்ட இதர எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் மின்சார இணைப்பு துண்டித்திருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ‘3 பின் பிளக்’ கொண்ட மின் சாதனங்களின் பிளக்கை அகற்றிவிடுவது பாதுகாப்பானது. வீட்டில் உள்ள அனைத்து ஸ்விட்ச்-களையும் ஆப் செய்து விடாமல் ஹால் பகுதியில் உள்ள ஓரிரு மின் விளக்குகள் வெளிச்சம் தர வேண்டும். அதன் மூலம் வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.
உபரி சாவி அவசியம்
வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு சில நாட்கள் வெளியூர் பயணம் செல்லும்போது காற்று, மழை, இடி, மின்சார பாதிப்புகள் மற்றும் இதர இயற்கை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதை மனதில் கொள்ளவேண்டும். அதுபோன்ற சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் உதவிகரமாக இருப்பார்கள். நம்பிக்கைக்கு உரியவர்களாக உள்ள பக்கத்து வீட்டுக்காரரிடம் வீட்டு சாவியை கொடுத்து விட்டு செல்வது பலவிதங்களில் பாதுகாப்பானது. பயண சமயத்தில் எதிர்பாராவிதமாக சாவி தொலைந்து விட்டாலும் அந்த சாவி கைகொடுக்கும்.
ஆன்-லைன் ஆர்டர்கள்
இன்றைய சூழலில் பல பொருட்களை ஆன்-லைன் மூலம் வாங்குவது பலருக்கும் வழக்கமாக உள்ளது. குறிப்பாக வெளியூர் செல்லும் சமயங்களில் ஏதாவது பார்சல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பின் அதை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அல்லது டெலிவரி செய்யப்படும் தேதியை மாற்றச்சொல்லி தகவல் தரலாம்.
கண்காணிப்பு கேமரா
இன்றைய நிலையில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம். இரவு பகலாக அவை இயங்குவதன் மூலம் குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்பவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இயலும். பிரயாணத்திற்கு முன்னர் அவை கச்சிதமாக இயங்குவதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஸ்மார்ட் போன் மூலம் அவற்றின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமும் இப்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story