கூடுதல் கடன் தொகை பெற உதவும் ‘ஸ்டெப் அப் லோன்’


கூடுதல் கடன் தொகை பெற உதவும் ‘ஸ்டெப் அப் லோன்’
x
தினத்தந்தி 16 Sep 2017 8:15 AM GMT (Updated: 16 Sep 2017 6:35 AM GMT)

வங்கிகள் வீட்டு கடன் அளிக்கும்போது மாத சம்பளம் உள்ளிட்ட இதர வருமானங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடன் தருகின்றன.

ங்கிகள் வீட்டு கடன் அளிக்கும்போது மாத சம்பளம் உள்ளிட்ட இதர வருமானங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடன் தருகின்றன. வழக்கமாக பெறக்கூடிய கடன் அளவை விடவும் சற்று கூடுதலாக வீட்டு கடன் தொகை தேவைப்படும் சமயங்களில் உதவி செய்யும் திட்டம் ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும்.

டன் தொகை

அதாவது, வீட்டு கடன் பெறுபவரின் எதிர்கால வருமானம் மற்றும் அதன் அளவு அதிகரிக்கும் நிலை ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டு, கடன் தொகையை அதிகரித்து தரப்படும் முறை ஸ்டெப் அப் லோன் என்று சொல்லப்படும்.

கூடுதல் தொகை


இன்றைய நிலையில் கிடைக்கும் வருமானம் பெரிய வீட்டை வாங்குவதற்கு போதுமானதாக இல்லாத சமயத்திலும், வீட்டுக்கடன் அளவை ஸ்டெப் அப் வீட்டுக்கடன் திட்டம் மூலம் கூடுதலாக பெற இயலும்.

தகுதிகள்

மேற்கண்ட கடன் திட்டத்தின் மூலம் ஒருவரது தகுதி நிலையை 5 முதல் 25 சதவீதம் வரையில் உயர்த்திக்கொள்ளலாம். அதாவது, தொழில் மற்றும் பணியின் அடிப்படையில் எதிர்காலத்தில் பெறக்கூடிய ஊதியம் அல்லது வருமானத்தை கணக்கில் கொண்டு இதைச்செய்யலாம்.

மாதாந்திர தவணை

இந்த வீட்டு கடன் திட்டத்தில் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுவதோடு, வீட்டு கடன் திட்டத்தில் கடனை பல்வேறு தவணைகளாக பிரித்து வைத்திருப்பார்கள். இதனால், வீட்டு கடனுக்கான ஆரம்ப கால மாதாந்திர தவணை செலுத்தும் பணத்தின் அளவு குறைவாக இருக்கும். காலம் செல்லச் செல்ல தவணைக்கான பண அளவு அதிகரிக்கும். ஒவ்வொரு வருடமும் தனி நபரின் ஊதியம் அல்லது வருமானம் உயரும் என்ற அடிப்படையில், கடனை திரும்ப செலுத்துவதற்கான திறனும் அதிகரிக்கும். முடிவில், கடனை திரும்ப செலுத்தி முடிக்கும் காலத்தில், வீட்டு கடன் தொகையைவிடவும் அதிக தொகை தவணையாக செலுத்தப்பட்டிருக்கும்.

கடன் பெற தகுதிகள்

வாழ்க்கை பயணத்தை முதன் முதலாக தொடங்கியிருக்கும் இளைஞர்களின் தேவையை கருத்தில் கொண்டு வீடுகளை வாங்குவதற்காக வங்கிகள் ஸ்டெப் அப் கடனை வழங்குகின்றன. எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கும் கூடிய துறையில், நல்ல வேலைக்கான தகுதியுடன் பணி புரிந்து வருபவர்களுக்கு ஏற்ற கடன் வகை ஸ்டெப் அப் வீட்டு கடன் ஆகும்.

கடன் வழங்கும் வங்கிகள்


பல்வேறு தனியார் வங்கிகள் தங்களிடம் உள்ள தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெப்அப் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகள் முழுமையான ஸ்டெப் அப் வீட்டு கடன் தருவதில்லை என்றாலும், ஸ்டெப் அப் முறையில் கடனை திரும்ப செலுத்தும் (ஸ்டெப் அப் ரி-பேமெண்டு பெசிலிடி) முறையில் கடன்களை வழங்குகின்றனர். இந்த முறையில் இ.எம்.ஐ தொகையின் அளவு காலத்திற்கேற்ப அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story