கட்டுமான பணிகளில் சிக்கன முறைகள்


கட்டுமான  பணிகளில் சிக்கன  முறைகள்
x
தினத்தந்தி 23 Sept 2017 2:30 AM IST (Updated: 22 Sept 2017 4:15 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் வெவ்வேறு அறைகளுக்கு இடையில் அமைக்கப்படும் பளு தாங்காத பார்ட்டி‌ஷன் சுவர்களுக்கு முடிந்த வரை கான்கிரீட் அல்லது செங்கல் சுவர்களை தவிர்ப்பது பல விதங்களில் நன்மை அளிப்பதாகும்.

1. வீட்டின் வெவ்வேறு அறைகளுக்கு இடையில் அமைக்கப்படும் பளு தாங்காத பார்ட்டி‌ஷன் சுவர்களுக்கு முடிந்த வரை கான்கிரீட் அல்லது செங்கல் சுவர்களை தவிர்ப்பது பல விதங்களில் நன்மை அளிப்பதாகும். குறிப்பாக கனமான சுவர்களுக்கு பதிலாக வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சுவர்களை கட்டமைக்கும்போது அறைகளில் கூடுதல் இடவசதி கிடைக்கும் வாய்ப்பை கவனத்தில் கொள்ளலாம்.

2. வீடு அல்லது அடுக்குமாடிகளின் கட்டுமானப்பணிகள் முடியும் வரை, செங்கல், சிமெண்டு மற்றும் இதர ரசாயனங்கள் போன்ற கட்டுமான பொருட்களை தேவைப்பட்ட அளவில் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்துவது முக்கியம்.

3. மின்சார ஒயர்களை தேர்வு செய்யும்போது நல்ல தரமான கம்பெனி தயாரிப்புகளை பயன்படுத்துவது எப்போதும் பாதுகாப்பானது. மொத்த பட்ஜெட் கணக்கில் சற்று கூடுதலாக இருந்தாலும், தரமான மின்சார கேபிள்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை பொருத்திய சில காலங்களுக்கு பிறகு பராமரிப்பு செலவுகள் பெருமளவு குறைகின்றன என்பதை நிபுணர்கள் குறிப்பிடுவதை மனதில் கொள்ளலாம்.  

4. நல்ல தரமான நிறுவனங்களின் பெயிண்டு வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம், சில வருடங்களுக்கு சுவர் பராமரிப்பு செலவுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். வழக்கமான பெயிண்டு வகைகள் சிக்கனமான பட்ஜெட்டுக்குள் இருந்தாலும், ஒரு சில மாதங்களில் சுவர் பராமரிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுவதாக அறியப்பட்டுள்ளது.

5. வீடு அல்லது அதன் மனை அமைந்துள்ள எல்லைகளை கச்சிதமாக அளவீடு செய்து காம்பவுண்டு சுவர் அல்லது இரும்பு ‘ஒயர் பென்ஸிங்’ அமைத்துக்கொள்வது பல விதங்களிலும் பாதுகாப்பாக இருக்கும்.

Next Story