சுவர் விரிசலை ஏற்படுத்தும் காரணிகள்


சுவர்  விரிசலை  ஏற்படுத்தும்  காரணிகள்
x
தினத்தந்தி 22 Sep 2017 9:30 PM GMT (Updated: 22 Sep 2017 10:57 AM GMT)

சுவர்களில் அமைக்கப்படும் சிமெண்டு மேற்பூச்சு மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளில் ஏற்படும் விரிசல்கள்

சுவர்களில் அமைக்கப்படும் சிமெண்டு மேற்பூச்சு மற்றும் கான்கிரீட் கட்டமைப்புகளில் ஏற்படும் விரிசல்கள் கட்டமைப்பை சார்ந்தவை மற்றும் கட்டமைப்பை சாராதவை என்று பொதுவான இரண்டு வகைகளாக குறிப்பிடப்படுகின்றன. அவற்றில், இரண்டாவதாக உள்ள கட்டமைப்பு சாராத விரிசல்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, தரம் குறைந்த மூலப்பொருட்கள், நீர் அதிகம் சேர்க்கப்பட்ட கலவை, தவறான முறையில் பினிஷிங் செய்யப்பட்ட மேற்பரப்பு, தேவைக்கு அதிகமாக ‘நீடில் வைப்ரே‌ஷன்’ செய்யப்பட்ட கான்கிரீட், நேரடி சூரிய வெளிச்சம் மற்றும் வீசும் காற்றினால் மேற்பரப்பில் உள்ள ஈரப்பதம் காய்ந்து விடுதல் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன.

மேற்கண்ட காரணங்களில் ஒன்று, நீரேற்றம் காரணமாக வெளிப்படும் வெப்பம் ஆகும். ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்டு தண்ணீருடன் சேர்ந்து வேதிவினை புரியும்போது வெளிப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் கண்களுக்கு தெரியும் வெடிப்புகளும், கண்களுக்கு தெரியாத நுண்ணிய விரிசல்களும் ஏற்படுகின்றன அடர்த்தி குறைந்த கான்கிரீட்டில் குளோரைடு, நீர், காற்று ஆகியவை எளிதாக உள்ளே நுழைந்து நீர், காற்று ஆகியவற்றோடு உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகளுடன் வேதிவினை புரிந்து, இரும்பு ஆக்ஸைடு என்ற துரு உருவாகிறது. இரும்பு கம்பிகளின் மேல் உருவாகும் துரு காரணமாக, கம்பிகள் உப்பி பெரிதாக மாறுகின்றன. அதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக கான்கிரீட்டில் விரிசல்கள் ஏற்படுகின்றன. கம்பிகளில் ஏற்படும் அந்த அரிப்பு காலப்போக்கில் கான்கிரீட் பெயர்ந்து விழவும் காரணமாகிறது.

Next Story