செவ்வாய் கிரகத்தில் வீடுகள்


செவ்வாய் கிரகத்தில் வீடுகள்
x
தினத்தந்தி 22 Sep 2017 9:45 PM GMT (Updated: 22 Sep 2017 11:24 AM GMT)

அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று கண்டறிந்திருக்கின்றன.

மெரிக்காவின் நாசா, ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று கண்டறிந்திருக்கின்றன. அது, உடனடியாக நடக்கும் சாத்தியங்கள் இல்லை என்றாலும், இன்னும் சில வருடங்களில் நடைமுறைக்கு வரலாம்.

எஸ்கிமோ வீடு

இன்றைய நிலையில், செவ்வாயில் தண்ணீர் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் ஆறுகள் ஓடியதற்கான தடயங்களையும், அதன் வடதுருவ பகுதியில் நில மட்டத்துக்கு கீழாக பனிக்கட்டி படிவங்கள் உறைந்திருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். மேலும், அங்கு குடியேறுவதற்கு அமைக்கப்படும் வீடுகள் துருவ பகுதிகளில் வசிக்கும் எஸ்கிமோக்களின் ‘இக்லூ’ போன்ற அமைப்பில் இருப்பது பாதுகாப்பானது என்றும் அறிந்துள்ளனர். அத்தகைய ஐஸ் வீடுகள் விண்வெளியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் தாக்கங்களையும் சமாளிக்கும் விதமாக அமைக்கப்படும்.

உயிரினங்கள் உதவி

குறிப்பாக, குளவி தனது உடலில் இருந்து சுரக்கும் ஒரு வகை நீரிலிருந்து மண்னை குழைத்து தனது கூட்டை வடிவமைப்பது போல, பாலூட்டிகளின் உடலில் சுரக்கும் ஒரு வகை திரவத்தை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் வீடுகளை அமைக்கவும் சாத்தியம் உள்ளதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாதுகாப்பு

மேலும், அத்தகைய வீடுகளில் செவ்வாயின் காற்று மண்டலத்தில் இருந்து பெறப்படும் கார்பன்– டை ஆக்சைடை பயன்படுத்தி பனி வீட்டின் உட்புறத்தில் பாதுகாப்புக்கு ஏற்ற செல்லுலார் அடுக்குகள் அமைக்கப்படும். புற வெளியிலிருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகள் மற்றும் இதர விண்கற்கள் ஆகியவற்றின் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க குடியிருப்பின் மேல் பகுதியில் தடிமனான ஒரு அடுக்கு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 

Next Story