தெரிந்து கொள்வோம்: சில் ஸ்லாப்


தெரிந்து கொள்வோம்: சில் ஸ்லாப்
x
தினத்தந்தி 22 Sep 2017 10:00 PM GMT (Updated: 22 Sep 2017 11:34 AM GMT)

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஜன்னல் அமைக்கப்பட்டு சில காலம் கழித்து, சுவரின் முனைகளில் விரிசல்கள் ஏற்படுவதை பலரும் பார்த்திருப்போம்.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஜன்னல் அமைக்கப்பட்டு சில காலம் கழித்து, சுவரின் முனைகளில் விரிசல்கள் ஏற்படுவதை பலரும் பார்த்திருப்போம். கட்டிட எடையை சுவர்கள் தாங்குவதுபோல, ஜன்னல்கள் மேற்கூரையின் எடையை தாங்கும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக, ஜன்னல்கள் மேற்கூரை எடையை ஒரு அளவுக்கு மேல் தாங்கும் சக்தி உடையவையாக இருப்பதில்லை. அதனால், அவற்றின் கார்னர் பகுதி சுவரில் விரிசல்கள் உண்டாகின்றன.

இரும்பு கம்பிகள்

மேற்கண்ட சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, ஜன்னல்கள் மட்டத்துக்கு சுவர்கள் கட்டப்பட்ட பிறகு அவற்றின்மீது 8 மி.மீ கனம் கொண்ட இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, இரண்டு அங்குல அளவில், பீம் போன்ற கட்டுமானம் அமைக்கப்படும். இந்த அமைப்பானது கட்டுமான பொறியியலில் ‘சில் லெவல்’ என்று சொல்லப்படும். ‘ஸ்லாப்’ வடிவத்தில் அமைக்கப்படுவதால் ‘சில் ஸ்லாப்‘ என்ற வழக்கத்தில் சொல்லப்படுகிறது.

வெறும் கான்கிரீட்

ஒரு சில தனி வீடுகளில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தாமல், வெறும் கான்கிரீட் கலவை மட்டும் சுவர்ப்பரப்பில் ஒரு அங்குல அளவுக்கு கொட்டப்பட்டு அமைக்கப்படுகிறது. அந்த முறை தவறு என்பதோடு, நன்மையை தருவதில்லை என்றும் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சரியான அமைப்பு

தரைத்தளம் மட்டுமில்லாமல் அனைத்து தளத்திலும் ‘சில் ஸ்லாப்’ அமைக்கப்பட வேண்டியது முக்கியம். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் அவை சரியாக  அமைக்கப்பட்டுள்ளதை கவனிப்பது அவசியம்.   

விரிசல் வராது


பொதுவாக, குடியிருப்புகளில் மேற்கண்ட ஸ்லாப் அமைப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ளும் பட்சத்தில் எதிர்காலத்தில் கட்டிட விரிசல்கள் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. பொதுவாக, கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கும் சமயங்களில் ‘சில் சிலாப்’ அமைக்கப்படுவதை எளிதாக அறிய இயலும். 

Next Story