சுற்று சூழலை காக்கும் பெயிண்டு வகை


சுற்று சூழலை காக்கும் பெயிண்டு   வகை
x
தினத்தந்தி 14 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 5:33 PM IST)
t-max-icont-min-icon

ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரெபென்’ என்று பெயிண்டு வகையானது சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரெபென்’ என்று பெயிண்டு வகையானது சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த பெயிண்டில் இடம் பெற்றுள்ள முக்கியமான பொருள் டைட்டானியம் ஆக்ஸைடு ஆகும். காரீயத்துக்கு பதிலாக டைட்டானியம் ஆக்சைடு அடிப்படை கொண்ட தயாரிப்பாக இந்த வகை பெயிண்டு அறியப்பட்டுள்ளது.

இந்த பெயிண்டை பயன்படுத்தும் பட்சத்தில் சுவர்களின் மேற்பரப்பில் பூஞ்சைகள் படராமல் தடுப்பதோடு, மற்ற வகை நுண்ணுயிர்களும் உயிர் வாழ முடியாது. பெயிண்டு பூசப்பட்ட பரப்பில் எளிதில் தீப்பிடிப்பதை தடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்று சூழல் மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்த முறையானது சிறிய பங்காக இருந்தாலும், பல நாடுகளில் இப்போது பரவ தொடங்கியுள்ளது.  

Next Story