பட்ஜெட்டுக்கு உகந்த பளபளப்பான கான்கிரீட் தரைகள்


பட்ஜெட்டுக்கு  உகந்த  பளபளப்பான  கான்கிரீட்  தரைகள்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:45 AM IST (Updated: 13 Oct 2017 5:38 PM IST)
t-max-icont-min-icon

தரைத்தளங்களை அமைப்பதில் பல்வேறு டைல்ஸ் மற்றும் மார்பில் வகைகள் இப்போது பரவலாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

ரைத்தளங்களை அமைப்பதில் பல்வேறு டைல்ஸ் மற்றும் மார்பில் வகைகள் இப்போது பரவலாக வழக்கத்தில் இருந்து வருகிறது. பலரும் தமது இல்லங்களில் கண் கவரும் விதத்தில் தரைத்தளத்தை அமைப்பதை பெருமையாக கருதுகிறார்கள். அதற்காக கட்டுமான பணிகளில் குறிப்பிட்ட அளவு பட்ஜெட் ஒதுக்கி தரைத்தளத்தை பல்வேறு வண்ண டைல்ஸ் அல்லது மார்பில் வகைகளால் அலங்கரிக்கிறார்கள்.

சிக்கன பட்ஜெட்

தரைத்தள அமைப்பில் மேற்கண்ட வழிகளை விடவும் சிக்கனமான பட்ஜெட்டுக்கு உகந்த மாற்று வழிகள் இருக்கிறதா..? என்ற கேள்விக்கு எளிமையான பதில் ஒன்று உள்ளது. அதாவது, கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளத்தை பாலிஷிங் முறையில் பளபளப்பாக மாற்றி அமைப்பதாகும்.

தற்போதைய நடைமுறை

பழைய முறையான மொசைக் மற்றும் டைல்ஸ் பாலிஷிங் போல தற்போது கான்கிரீட் பாலிஷிங் தொழில் நுட்பம் ஆங்காங்கே பரவலாக நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. வீடுகள், குடியிருப்புகள் ஆகிய இடங்களுக்கு மட்டுமல்லாமல் அலுவலகங்களுக்கும் இந்த முறையானது ஏற்றதாக கருதப்படுகிறது.   

மாற்று முறை

முன்னரே இந்த முறையானது புழக்கத்தில் இருந்து வந்தாலும், மாற்று முறைகள் பயன்படுத்தப்படும் இன்றைய காலகட்டத்தில் இந்த முறைக்கான தேவை அதிகரித்துக்கொண்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். வழுக்காத தன்மை கொண்ட காரணத்தால், பலரும் புழங்கும் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளின் வெளிப்புற தரைத்தள அமைப்புகள் இம்முறையில் அமைக்கப்படுவதை பலர் விரும்புகிறார்கள்.  

விரயங்கள் இல்லை

கான்கிரீட் பாலிஷிங் முறையில் ஒட்டுதல், வெட்டுதல் மற்று விரையம் ஆகிய சிக்கல்கள் இருக்காது என்பதோடு, அதிகமான வேலைகளும் இருக்காது. மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் பரப்புகளையும் குடும்ப அங்கத்தினர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் மாற்றி அமைத்து கொள்ள இம்முறை பயன்படுகிறது. அதற்கான கருவிகளும் தற்போது உபயோகத்தில் இருந்து வருகின்றன.

நிறுவனங்களில் பயன்பாடு குறிப்பாக, நமக்கு வேண்டிய வண்ணங்களில் தரைத்தளத்தை கான்கிரீட் பாலிஷிங் முறையில் உருவாக்க இயலும். பல நிறுவனங்கள் தங்களது தரைத்தளங்களை மேற்கண்ட  முறையை பயன்படுத்தி, கண்கவர் வண்ணங்களில் அமைத்துள்ளன. இந்த முறையின் மூலம் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட அளவை சிக்கனப்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story