அடுக்கு மாடிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு


அடுக்கு மாடிகளில் கழிவு நீர்  சுத்திகரிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2017 5:00 AM IST (Updated: 13 Oct 2017 5:43 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் காரணமாக, பற்றாக்குறையாக வருடத்தின் பல மாதங்களில் உள்ளது.

ண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் காரணமாக, பற்றாக்குறையாக வருடத்தின் பல மாதங்களில் உள்ளது. இந்த குறைபாட்டை தடுக்க குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் மறு சுழற்சி செய்து பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுத்திகரிப்பு முக்கியம்

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது பற்றி பல இடங்களில் திட்டமிடப்பட்டு வருகிறது. அவ்வாறு முறையாக சுத்திகரிப்பு செய்யும் பட்சத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் வாய்ப்புள்ளது.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்

பொதுவாக, நிலத்தடி நீரில் பல்வேறு தனிமங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத வெவ்வேறு பொருட்களும் கலந்திருக்கும். அவற்றை சுத்திகரித்து பயன்படுத்த ஆர்.ஒ பிளாண்ட் (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் பிளான்ட்) சரியான தீர்வாக இருக்கும்.

அடுக்கு மாடிகளில் பயன்பாடு

இப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக பகுதிகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் பொருத்தப்படுகின்றன. இப்போது கட்டுனர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆர்.ஒ பிளாண்டுகள் அமைப்பதை வலியுத்துகிறார்கள். இதற்கு அதிக பொருட்செலவு இல்லாமல், சிக்கனமான விலையில் ஆர்.ஒ பிளாண்டுகள் அமைத்து தரக்கூடிய தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவற்றை இயக்கும் முறைகள் பற்றியும் அவர்கள் சொல்லி தருவது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில்நுட்பம்

மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பில் ‘பிளாஸ்மா எலக்ட்ரோ ஆக்ஸிடேசன்’ என்ற தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மறு சுழற்சி

 செய்து பயன்படுத்தும் நீரில் எந்த விதமான கெட்ட வாசனையும் இருப்பதில்லை. மேலும், நீரின் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். இந்த அமைப்பை அமைத்து பயன்படுத்த குறுகிய அளவுள்ள இடமே போதுமானது.

Next Story