கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கும் இயந்திரம்
நியூயார்க்கை சேர்ந்த கன்ஸ்ட்ரக்சன் ரோபோட்டிக்ஸ் (construction robotics) நிறுவனம் சாம் (SAM Semi Automated Mason) என்ற தானியங்கி கட்டுமான இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
நியூயார்க்கை சேர்ந்த கன்ஸ்ட்ரக்சன் ரோபோட்டிக்ஸ் (construction robotics) நிறுவனம் சாம் (SAM Semi Automated Mason) என்ற தானியங்கி கட்டுமான இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. மேற்கண்ட இயந்திரங்கள் எதிர்வரும் 2050–ம் ஆண்டிற்குள் கட்டுமான துறையில் உள்ள வேலைகளில் மனித சக்திக்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
வேகமான சுவரமைப்பு
மேற்கண்ட கட்டுமான இயந்திரம், மனிதனை விடவும் ஆறு மடங்கு வேகத்தில் செங்கல் சுவரை கட்டமைக்கும் திறன் கொண்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 செங்கற்கள் கொண்ட சுவரை மனித உழைப்பால் அமைக்க முடியும் நிலையில் கட்டுமான இயந்திரம் 3000 செங்கற்களை சுலபமாக அமைத்துவிடும். இந்த இயந்திரத்திற்கு செங்கற்கள் மற்றும் அதற்கான சிமெண்டு கலவைகளை உள்ளீடு செய்து கட்டளையிட்டு, பராமரிக்க ஒருவர் மட்டும் இருந்தால் போதுமானது.
மற்றொரு தயாரிப்பு
மேற்கண்ட சாம்(SemiAutomated Mason) என்ற அமெரிக்க கட்டுமான இயந்திரத்திற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய நிறுவனம் ‘ஹட்ரியன் எக்ஸ்’ என்ற சோதனை கட்டுமான எந்திரத்தை 2016–ம் ஆண்டில் உருவாக்கியது. இந்திய மதிப்பில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருந்தாலும், காலப்போக்கில் சில லட்சங்களில் தயாரிக்கும் நிலையும் ஏற்படலாம் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாளில் வீடு
ஆஸ்திரேலிய இயந்திரமான ‘ஹட்ரியன் எக்ஸ்’ கருவியில் வீட்டின் வடிவாக்கத்தை உள்ளீடு செய்தால் இரண்டு நாட்களுக்குள் நமது பிளான்படி வீடு அமைக்கப்பட்டிருக்கும். இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 1000 செங்கற்களை அடுக்கி சுவர்களை அமைக்கும் திறன் கொண்டது. அதாவது ஒரு நாளில் 24 ஆயிரம் செங்கற்கள் கொண்ட சுவர் பரப்பு கட்டமைக்கப்பட்டிருக்கும்.
இந்திய கட்டுமானத்துறை
இந்திய அளவில் கட்டுமான துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 30 இலட்சம் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வருகின்ற 2025–ம் ஆண்டிற்குள் கட்டுமான துறையில் இந்தியா
உலக அளவில் மூன்றாவது பெரிய வல்லரசாக மாறிவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். ஏராளமான மனித வளம் கொண்ட இந்தியாவில் மேலை நாடுகளில் புரட்சியை ஏற்படுத்திய நவீன தொழில்நுட்பங்கள் சற்று தாமதமாகத்தான் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

Related Tags :
Next Story