காம்பவுண்டு சுவரை எளிதாக அமைக்கலாம்


காம்பவுண்டு சுவரை எளிதாக  அமைக்கலாம்
x
தினத்தந்தி 14 Oct 2017 6:30 AM IST (Updated: 13 Oct 2017 6:04 PM IST)
t-max-icont-min-icon

கட்டமைப்புகளுக்கான காம்பவுண்டு சுவர் அவசியம் என்ற நிலையில், இன்றைய தேவைகளுக்கேற்ப தொழில் நுட்பமும் வளர்ச்சி கண்டுள்ளது.

ட்டமைப்புகளுக்கான காம்பவுண்டு சுவர் அவசியம் என்ற நிலையில், இன்றைய தேவைகளுக்கேற்ப தொழில் நுட்பமும் வளர்ச்சி கண்டுள்ளது. பழைய முறைப்படி வேண்டிய அளவுக்கு நீளமான சுவர்கள் கற்கள் மற்றும் சிமெண்டு கலவை கொண்டு அமைக்கப்பட வேண்டிய நிலை இப்போது இல்லை. கட்டமைப்புக்கேற்ற தூண்களை தக்க இடைவெளிகளில் அமைத்துவிட்டு, அதன் இடைவெளிகளில் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட பலகைகளை பொருத்தும் எளிய முறை மட்டுமல்லாமல் வெவ்வேறு பொருட்களைக்கொண்டும் காம்பவுண்டு சுவர் அமைப்பது இப்போது நடைமுறையில் உள்ளது.

மேலும், சுற்று சுவருக்கான நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றை கணக்கிட்டு, காம்பவுண்டு சுவர் தயாரிப்பு நிறுவனங்களிடம் தெரிவிக்கும் பட்சத்தில், பல பகுதிகளாக அவற்றை தயாரித்து நமது இடத்திற்கு கொண்டு வந்து பொருத்தப்படும் முறையும் உண்டு. இதனால் தேவைக்கு அதிகமான மனித உழைப்பு மற்றும் பண விரயம் தவிர்க்கப்படுகிறது.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப் படும் இத்தகைய காம்பவுண்டு சுவர் பிளாக்குகள் மூலம் பொருள் விரயம், வாகன பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவை தவிர்க்கப்படுவது கவனிக்கத்தக்கது. இத்தகைய முறையில் தயாராகும் சுற்று சுவர்களுக்கான தேவை பெரிய அளவிலான வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர கட்டுமான அமைப்புகளுக்கு பொருத்தமாக இருப்பதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story