கான்கிரீட்டுக்கு வலிமை சேர்க்கும் மூங்கில்
நமது பகுதிகளில் மூங்கிலால் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் 30 வருடங்களுக்கும் மேலாக தாக்குப்பிடித்து நிற்பதை பார்க்கலாம்.
நமது பகுதிகளில் மூங்கிலால் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் 30 வருடங்களுக்கும் மேலாக தாக்குப்பிடித்து நிற்பதை பார்க்கலாம். பழங்குடி மக்கள் வாழும் வசிப்பிடங்களில் முக்கியமான கட்டுமான பொருளாக மூங்கில் இருப்பதை வல்லுனர்கள் கவனித்து வருகிறார்கள். எடை குறைவான தன்மை கொண்டதாகவும், இரும்புக்கு நிகரான உறுதி உள்ளதாகவும் இருப்பதாலும் நில அதிர்வுகளால் பாதிக்கப்படாத தன்மை கொண்டதாகவும் மூங்கில் இருக்கிறது.
‘மூங்கில் கான்கிரீட்’
இரும்பு கம்பிகளை கான்கிரீட்டில் பயன்படுத்துவதற்கு பதிலாக மூங்கிலால் செறிவூட்டப்பட்ட கான்கிரீட் என்பது பல நாடுகளில் பயன்படுத்தப்படும் முறையாக இருந்து வருகிறது. ‘பேம்பூ ரீ–இன்போர்ஸ்டு கான்கிரீட்’ என்ற முறை பல நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘பில்லர்கள்’, அஸ்திவார அமைப்புகள், சுவர்கள் ஆகியவற்றை ‘மூங்கில் கான்கிரீட்’ கொண்டு அமைப்பதோடு, தரைத்தளங்கள் அமைக்கவும் மூங்கில் பயன்படுத்தப்படு கிறது.
மாற்று கட்டமைப்பு
நவீன ரசாயன பொருட்களை பயன்படுத்தி மூங்கிலை நீண்ட காலத்துக்கு தாங்கி உழைக்கும்படி செய்ய முடியும். அதன் விரைவான வளர்ச்சி காரணமாகவும், வலிமையின் காரணமாகவும் இயற்கை கட்டுமான மூலப்பொருளாக நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எடை குறைவாக இருப்பதால் அதை பயன்படுத்தி கட்டமைப்புகளின் முக்கிய பாகங்களை உருவாக்குவது பற்றிய ஆய்வுகள் பல நாடுகளில் வெற்றிகரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story