சொந்த வீட்டு கனவை சுலபமாக நிறைவேற்ற முன்னணி நிறுவனம் வழங்கும் குடியிருப்பு திட்டம்


சொந்த வீட்டு கனவை சுலபமாக நிறைவேற்ற  முன்னணி நிறுவனம் வழங்கும் குடியிருப்பு திட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2017 4:00 AM IST (Updated: 20 Oct 2017 6:05 PM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை சிரமில்லாமல், எளிதாக நிறைவேற்றும் வகையில் நோவா லைப் ஸ்பேஸ் நிறுவனம்

வாடிக்கையாளர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை சிரமில்லாமல், எளிதாக நிறைவேற்றும் வகையில் நோவா லைப் ஸ்பேஸ் நிறுவனம், ‘நோவா மெரிடியன் ஈஸி ஹோம்ஸ்’ என்ற புதிய குடியிருப்பு திட்டத்தை மேற்கு முகப்பேரில் அறிமுகம் செய்துள்ளதாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த திட்டம் பற்றி மேலும் அவர்கள் தெரிவித்ததாவது:–

சென்னையின் மையப் பகுதியாக அமைந்துள்ள மேற்கு முகப்பேர் பகுதியில் அனைத்து வித வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை ரூ.4.5 லட்சம் மட்டும் முன்பணமாக செலுத்தி வாடிகையாளர்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டுக்கு குடியேறும் சமயத்தில் சுலபமான மாதத்தவணை முறைகளில் செலுத்தலாம்.    

வியப்பூட்டும் இந்த குடியிருப்பு மேற்கு முகப்பேர் பகுதியில், நான்கு மாடிகள் கொண்ட கண்கவர் கட்டமைப்பாக அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் NO PRE-EMI என்ற PLAN மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்திர தவணையை உடனே செலுத்த வேண்டிய அவசியமில்லை. NO PRE-EMI PLAN மூலம் வாடிக்கையாளர்களுக்கு மூன்று முக்கியமான பயன்கள் கிடைக்க இருப்பதாக நோவா லைப் ஸ்பேஸ் நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். அவை:–

பொருளாதார சிக்கல்கள் இல்லை

அதாவது, இந்த திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுக்கு குடியேறும் வரையில் வீட்டுக்கான மாதாந்திர தவணை செலுத்த வேண்டியதில்லை. அதனால், இப்போது குடியிருக்கும் வீட்டுக்கான வாடகையை செலுத்தி வரும் நிலையில், புதிய வீட்டுக்கான மாதாந்திர தவணை கூடுதல் பொருளாதார சிக்கலாக மாறாது.

திட்டம் தாமதமானாலும் கவலை இல்லை

வாடிக்கையாளர் தமக்கு விருப்பமான வீட்டை வாங்கிய பிறகு, அதற்கான மாதாந்திர தவணைகளை நிறுவனமே செலுத்தி வருவதால், கட்டுமான பணிகள் சரியான நேரத்தில் செய்து முடிக்கப்படும். வாடிக்கையாளரது கைக்கு வீடு வந்த பிறகு அவர் மாதாந்திர தவணையை செலுத்தினால் போதும் என்ற நிலையில் கட்டுமான பணிகள் தாமதமாக ஆனாலும், வாடிக்கையாளருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

எதிர்காலத்தில் வீட்டின்  மதிப்பு உயரும்

மேற்கண்ட குடியிருப்பு திட்ட பணிகள் முடிவடைய கிட்டத்தட்ட 2 முதல் 3 ஆண்டு காலம் ஆகலாம். அவ்வாறு பணி கள் முடிவடையும் காலகட்டத்தில் வீட்டின் மதிப்பு நிச்சயம் அதிகமாகியிருக்கும். ஒருவேளை வாடிக்கையாளர் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை விற்க விரும்பினாலும் அப்போதைய சந்தை மதிப்பு அதிகம் என்ற நிலையில் குறைந்த அளவில் செலுத்திய முன்பணத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

•வீடுகளின் முன்பக்ககதவில் அதிநவீன பயோ மெட்ரிக் முறையிலான பூட்டுகள்

• குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

• குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகள் • வெளியில் நிற்பவரை கவனிக்க முன் கதவில் வீடியோ தொலைபேசி • பவர் கட் சமயங்களில் ஜெனரேட்டர் வசதி • தானியங்கி லிப்ட் வசதி

• தொலைக்காட்சி டி.டி.எச் மற்றும் இண்டர்காம் வசதிகள் • கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்.  

மேலும், 2017–ம் ஆண்டிற்கான ‘டைம்ஸ் ரியல்ட்டி ஐகான்ஸ் அவார்டு’ பெற்ற நோவா லைப் ஸ்பேஸ் நிறுவனம் 1.36 ஏக்கர் பரப்பில், 3 பிளாக்குகளில் 88 நவீன வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு குறைவான முன்பணத்தில், பல்வேறு பிரத்தியேக வசதிகளுடன் வழங்க உள்ளதாக நோவா லைப் ஸ்பேஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு: 044–3000 3242

Next Story