உலக நாடுகளில் வரவேற்பு பெற்ற கான்கிரீட் தொழில்நுட்பம்


உலக நாடுகளில் வரவேற்பு பெற்ற  கான்கிரீட் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 28 Oct 2017 12:00 AM GMT (Updated: 27 Oct 2017 1:13 PM GMT)

விண்ணை முட்டும் கோபுரங்களாக நிமிர்ந்து நிற்கும் பல்வேறு உலக நாடுகளின் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களில் குறிப்பாக சொல்லக்கூடியது எஸ்.சி.சி என்ற கான்கிரீட் வகையாகும்.

விண்ணை முட்டும் கோபுரங்களாக நிமிர்ந்து நிற்கும் பல்வேறு உலக நாடுகளின் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களில் குறிப்பாக சொல்லக்கூடியது எஸ்.சி.சி என்ற கான்கிரீட் வகையாகும். அதாவது, சுயமாகவே தன்னை பலப்படுத்தி கொண்டு பரவக்கூடிய கான்கிரீட் (Self Consolidating Concrete)  என்று இது குறிப்பிடப்படுகிறது.

முக்கியமான இடம்


கட்டுமானத்துறையில் கடந்த 20 ஆண்டு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளில் எஸ்.சி.சி என்பது முக்கியமான இடத்தை பெற்றிருப்பதாக கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

தாமாக வலுவடையும்


பொதுவாக, கான்கிரீட் என்ற கூட்டு பொருளானது காற்று குமிழ்களை உருவாக்காமல், எல்லா இடங்களிலும் கச்சிதமாக இடைவெளிகள் இல்லாமல் நன்றாக பரவும் விதத்திலும், எளிதாக பயன்படுத்த உகந்ததாகவும் இருக்கவேண்டும் என்றுதான் கட்டுமான வல்லுனர்கள் விரும்புகிறார்கள். இந்த நிலையில் எஸ்.சி.சி என்பது மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், எளிதில் தானாகவே பலப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் உலக அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.

செயல்திறன் பெற்றது

மேலும், குறைந்த அளவே தேவைப்படும் தண்ணீர், தாமாகவே உறுதி அடையக்கூடிய தன்மை, ஒட்டுமொத்தமாக சிக்கன செலவில் கிடைப்பது, இறுதி கட்ட ‘பினிஷிங்’ மற்றும் மேற்பூச்சு போன்ற நிலைகளில் இதன் செயல்திறம் காரணமாக ‘எஸ்.சி.சி’ கான்கிரீட் பல நாடுகளிலும் பரவலாக உபயோகத்தில் இருந்து வருகிறது.  

விரைவான பணிகள்

‘பிரிகாஸ்ட்‘ அமைப்பு என்ற கட்டுமான யுக்தியின் நீட்சியாக பார்க்கப்படும் ‘எஸ்.சி.சி’ முறையானது பல அடுக்கு மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு உகந்த தொழில்நுட்பம் என்று வல்லுனர்கள் குறிப்பிடுள்ளார்கள். மேலும், கட்டுமான பணிகளை தடங்கல்கள் இன்றி, விரைவாக செய்து முடிக்கலாம். 

Next Story