உடல் நலனுக்கு உதவும் கட்டுமான முறைகள்


உடல் நலனுக்கு உதவும் கட்டுமான  முறைகள்
x
தினத்தந்தி 28 Oct 2017 12:15 AM GMT (Updated: 27 Oct 2017 1:16 PM GMT)

பெரும்பாலான கட்டிட அமைப்புகளில் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் முறையாக வாஸ்து உள்ளது.

பெரும்பாலான கட்டிட அமைப்புகளில் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் முறையாக வாஸ்து உள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றி அமைக்கப்பட்ட கட்டிட அமைப்புகள் இனிமையான வாழ்க்கையை தருகின்றன என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, பல குடியிருப்பு திட்டங்கள் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ளலாம்.  

உள் கட்டமைப்புகள்

வில்லா எனப்படும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் ‘பிளாட்’ வாங்குபவர் அல்லது வாடகைக்கு குடியேறுபவர்கள் இப்போது வாஸ்து அமைப்பு பற்றி கவனம் செலுத்துவதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பிளாட் அல்லது தனி வீட்டின் தன்மைகள் நன்மைகளை அளிக்கின்றதா..? என்பதை வாஸ்துவை மட்டும் முன் வைத்து முடிவு செய்யாமல், கட்டிடத்தின் உள் கட்டமைப்புகளை அடிப்படையாக வைத்தும் கவனிக்க வேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.  

காற்றோட்டம் அவசியம்

கச்சிதமான காற்றோட்ட வசதிகள், போதுமான இயற்கை வெளிச்சம், வெளிப்புற சத்தங்களால் பாதிப்பற்ற தன்மை போன்ற அமைப்புகள் சரியாக இல்லாத கட்டிடங்கள் அவற்றில் வசிப்பவர்களுக்கு சிக்கலை உண்டாக்குகின்றன. அத்தகைய சிக்கல்களை ‘சிக் பில்டிங் சிண்ட்ரோம்’ என்று குறிப்பிடுகிறார்கள். மேலும், கட்டமைப்புகளுக்குள் நல்ல முறையில் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் வரக்கூடிய பாதிப்புகளை ‘பில்டிங் ரிலேட்டடு இல்னெஸ்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.

‘ஏர் குவாலிட்டி’

இப்போதைய நகர நாகரிகங்கள் வளர்ந்துள்ள சூழலில், பெரு நகரங்களில் உள்ள இடப்பற்றாக்குறை காரணமாக கட்டிடங்களில் ‘இண்டோர் ஏர் குவாலிட்டி’ சரியாக இருப்பதில்லை என்று பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, கட்டிடத்தை முறையாக பராமரிக்காத காரணத்தால் ‘இண்டோர் ஏர் குவாலிட்டி’ பாதிக்கப்படுவதோடு, கட்டிடத்தில் வசிப்பவர்களது பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கட்டிட வடிவமைப்பு குறைபாடுகள் காரணமாகவும் உட்புற காற்றின் தரம் பாதிப்படைகிறது.

காற்றின் அளவு

‘சிக் பில்டிங் சிண்ட்ரோம்’ என்பது கட்டிடத்தின் உட்புறத்தில் போதுமான வெண்டிலே‌ஷன் இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பொதுவாக, ஒரு கட்டிடத்தில் உள்ளவருக்கு 60 நொடிகளுக்கு 15 கன அடி அளவு கொண்ட காற்று அவரது எளிமையான சுவாச இயக்கத்துக்கு தேவை என்ற நிலையில் பல இடங்களில் மேற்கண்ட சூழல் இருப்பதில்லை என்பதும் அறியப்பட்டுள்ளது.

வேதிப்பொருள்கள்

குளிர்சாதன அமைப்பு காற்றை கச்சிதமாக அறைகளுக்குள் பரவ விடுவதில் சிக்கல் என்றால்கூட வெண்டிலே‌ஷன் பிரச்னைகள் வரலாம். குறிப்பாக, கட்டிடங்களுக்குள் உள்ள பெயிண்டிங், மர அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்கள், வெவ்வேறு இயந்திர இயக்கங்கள் ஆகியவற்றால் வெளிப்படும் கரிம பொருட்களும் சிக்கல்களை உண்டாக்கலாம்.

காற்று மாசு

குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் கியாஸ் ஸ்டவ் வெளியேற்றும் வாயுக்கள், இதர மின்சாதன பொருட்கள் வெளியேற்றும் வாயுக்கள் போன்றவையும் சிக்கலை உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு வெளிப்புறம் உள்ள மாசடைந்த காற்று கட்டிடத்திற்குள் நுழைவதாலும் பாதிப்புகள் வரலாம்.

‘வெண்டிலே‌ஷன்’

கட்டிட அமைப்புகளில் உட்புற காற்றின் தரத்தை மாசு படுத்தும் அமைப்புகளை சரி செய்து கொள்வதோடு, கரிமப்பொருள்கள் வெளிப்படுத்தும் வேதிப்பொருட்கள் தக்க வெண்டிலே‌ஷன் முறையில் வெளியேறும் வசதிகளையும் செய்து கொள்ளவேண்டும். மேற்கண்ட கட்டமைப்பு ரீதியான சிக்கல்களை சரி செய்ய நிபுணர்கள் ஆலோசனை தருகிறார்கள். இன்றைய சூழலில் அறைகளின் காற்றை சுத்திகரிக்கும் ‘ஏர் பியூரிபையர்’ போன்ற காற்று சுத்திகரிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்படலாம். 

Next Story