வாஸ்து மூலை : வீட்டு உபயோக பொருட்களின் அமைப்பு


வாஸ்து மூலை : வீட்டு உபயோக பொருட்களின் அமைப்பு
x
தினத்தந்தி 11 Nov 2017 3:00 AM IST (Updated: 10 Nov 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

* தொலைக்காட்சி பெட்டியை அறையின் அக்னி அல்லது வாயு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு சுவரை தொடாமல் இடைவெளி விட்டு அமைக்கலாம்.

* குளிர்சாதன பெட்டியை சமையலறை, உணவருந்தும் அறை, ஹால் ஆகிய இடங்களில் வாயு மூலை அல்லது அக்னி மூலையில் வடக்கு அல்லது கிழக்கு சுவர்களை ஒட்டாமல் வைக்கவேண்டும். நைருதி பகுதியில் வைக்கும்போது தெற்கு, மேற்கு சுவர்களை ஒட்டி வைக்கலாம்.

* ‘அலங்கார மேசை’ வடக்கு அல்லது கிழக்கு பார்த்து அமர்ந்து பயன்படுத்துவதுபோல வடக்கு அல்லது கிழக்கு சுவர்களிலிருந்து சற்று இடைவெளி விட்டு அமைக்கலாம்.

* முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் பொருத்துவதாக இருந்தால் வடக்கு அல்லது கிழக்கு சுவரில் அமைக்கலாம். பழுதடைந்த மற்றும் தெளிவற்ற கண்ணாடிகளை பயன்படுத்துவது கூடாது.

Next Story