சுலபமாக வீட்டு கடன் பெற உதவும் ‘நிதி அறிக்கை’


சுலபமாக வீட்டு கடன் பெற உதவும்  ‘நிதி அறிக்கை’
x
தினத்தந்தி 11 Nov 2017 4:00 AM IST (Updated: 10 Nov 2017 7:13 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் கடன் பெறுபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களை பராமரிப்பதற்காக இந்திய அளவில் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சிபில்’ ஆகும்.

வங்கிகளில் கடன் பெறுபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களை பராமரிப்பதற்காக இந்திய அளவில் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சிபில்’ (Credit Information Bureau (India) Ltd) ஆகும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவல்களை ‘சிபில்’ அமைப்புக்கு தெரிவிக்கின்றன. அந்த தகவல்கள் ‘சிபில்’ அமைப்பில் சேமிப்புகளாக வைக்கப்பட்டு, வங்கிகள் கேட்கும்போது தெரிவிக்கப்படுகின்றன. இந்த சுழற்சி முறை காரணமாக, வாடிக்கையாளர்களின் அனைத்து நிதி பரிமாற்ற நடவடிக்கைகளும் வங்கிகள் வசம் கிடைக்கப்பெற்று அவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.

‘புள்ளிகள் கணக்கீடு’

வீட்டு கடன், வீட்டு அடமான கடன் போன்றவற்றை வங்கியில் பெறும்போது அதற்கான புள்ளிகள் அதிகமாக இருக்கும். காரணம், கடனுக்காக சம்பந்தப்பட்ட வீடானது

அடமானம் வைக்கப்படும். ஆனால், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்

களுக்கு புள்ளிகள் குறைவாக கணக்கிடப்படும். மேலும், திரும்ப செலுத்தும் கடனுக்கான கால அளவின் அடிப்படையிலும் ‘புள்ளிகள் கணக்கீடு’ (வெயிட்டேஜ்) அமையும். அதாவது, வீட்டு கடன் நீண்ட கால அவகாசம் கொண்டதாகவும், அதற்கான இ.எம்.ஐ தொகை குறைவாகவும் இருக்கும். காலப்போக்கில் வருமானம் அதிகரிக்கும் சமயங்களில் கடனை சுலபமாக திருப்பி செலுத்த முடியும்.

கடன் தொகை

பொதுவாக, மொத்த கடன் தொகை அளவானது கடன் வாங்குபவரின் ஒரு வருட சம்பள தொகையின் மொத்த அளவில் அதிகபட்சம் 60 சதவீதம் என்ற அளவுக்கு இருப்பதே பாதுகாப்பு. அந்த தொகை அதிகரித்தாலும், சிபில் ஸ்கோரில் அது பிரதிபலிக்கும். குறிப்பிட்ட ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து கிடைக்கவில்லை எனும் பட்சத்தில், அடுத்த வங்கியில் உடனடியாக கடன் கேட்டு விண்ணப்பம் செய்வது அல்லது ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடன் விண்ணப்பம் செய்வது ஆகியவற்றின் மூலமும் ‘கிரெடிட் ஸ்கோர்’ குறையலாம். வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்த, ஆறு மாதம் கழித்தே அடுத்த கடன் அல்லது ‘கிரெடிட் கார்டுக்கு’ விண்ணப்பிப்பது நல்லது.

கணக்கீட்டு முறைகள்

வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்தும் முறைகளுக்கு 30 சதவிகிதம், கடனின் வகை மற்றும் அதன் கால அளவு ஆகியவற்றுக்கு 25 சதவிகிதம், சம்பளம் மற்றும் கடன் தொகை இடையே உள்ள வித்தியாசத்துக்கு 25 சதவிகிதம், கிரெடிட் கார்டு லிமிட்டில் எவ்வளவு சதவிகித தொகை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு 20 சதவிகிதம் என்று அளவுகளில் ‘வெயிட்டேஜ்’ கணக்கிடப்படுகிறது. வங்கியில் கடன் பெறாதவர்கள்

விண்ணப்பிக்கும்போது சிபில் பதிவில் NA அல்லது NH என குறிப்பிடப்படும்.

முன்னுரிமை

பொதுவாக, சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரையில் அளிக்கப்படும் நிலையில், வங்கிகள் 750 மதிப்பெண்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு கடன் அளிப்பதில் முன்னுரிமை தருகின்றன. அதாவது, கடன் கேட்பவர் கடந்த 6 மாத காலத்தில் பெற்ற கடன்களின் பின்னணி அடிப்படையாக கொள்ளப்படும். அதிக ஸ்கோர் பெற்றவர்கள் குறைந்த ‘ரிஸ்க்’ உடையவர்களாகவும், குறைந்த ஸ்கோர் பெற்றவர்கள் அதிக ‘ரிஸ்க்’ உடையவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

தகவல் சோதனை

வங்கி கடனை சரியான காலகட்டங்களில் திரும்ப செலுத்தி முடித்த பிறகு அல்லது கடனை முன் கூட்டியே செலுத்தி முடித்த பிறகு அவை பற்றி சரியாக ‘சிபில் ரிப்போர்ட்டில்’ பதிவாகி உள்ளதை கவனிப்பது அவசியம். சில நேரங்களில் கடனை சரியாக திரும்ப செலுத்தாமல் அல்லது முன்கூட்டியே

கடனை கட்டி முடித்து இருப்போம். எனவே, அந்தச் சமயத்தில் எல்லாம் உங்களின் சிபில் ரிப்போர்ட்டுக்கு தேவையான தகவல்களை வங்கி சரியாக அளித்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக, சிபில் ரிப்போர்ட்டில் உள்ள எந்த தகவல்களை மாற்ற முடியாது என்ற நிலையில் இதர காரணங்களால் ரிப்போர்ட்டில் தகவல்கள் சரியாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தருவது அவசியம்.

Next Story