மனை அமைவிடத்தில் கவனம் தேவை..
வீட்டு மனைகளை வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்.
வீட்டு மனைகளை வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். குறிப்பாக, புறநகர் பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்கள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் மனைகள் இருக்கும் பட்சத்தில் அடிப்படையான சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியம். வாழ்நாள் முதலீடாக கருதப்படும் மனைகளின் அமைவிடம் பற்றி கச்சிதமாக கவனிப்பது அவசியம்.
ரயில்வே அமைந்துள்ள டிராக்கிலிருந்து 400, 500 மீட்டர் தொலைவில் மனை அமைந்துள்ள நிலையில், பொறியாளரது ஆலோசனைப்படி அதிர்வுகளை தாங்கும் அளவுக்கு கட்டமைப்பின் அஸ்திவாரத்தை திட்டமிட்டு அமைக்கவேண்டும். குறிப்பாக மண் பரிசோதனை செய்யப்படுவது முக்கியமானது.
மேலும், இந்தியா பி–4 திட்டப்படி இரயில்வே டிராக் அருகில் அனுமதி அளிக்கப்பட்ட துரத்திற்குள் கட்டிடம் அமைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரயில்வே டிராக்கிலிருந்து குறிப்பிட்ட தூர இடைவெளியில் வீடுகள் அமைக்கப்படும்போது, எதிர்காலத்தில் இரயில்வே டிராக்குகளை கூடுதலாக்கப்படும் வாய்ப்பு உள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அந்த பகுதியில் ரயில்கள் ஓட்டம் காரணமாக நில அதிர்வுகள் ஏற்பட்டு, கட்டிடத்தில் அடிப்படை அமைப்பை பாதிக்கலாம். அதனால், தக்க முறையில் பொறியாளரது ஆலோசனைப்படி கட்டிட வடிவமைப்பு செய்யப்பட வேண்டும். பொதுவாக, ரயில்வே டிராக்கிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் வீடுகள் அமைக்கப்படுவதுதான் பாதுகாப்பானது என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஊராட்சி கட்டிட விதிமுறைகளின்படி 120 மீட்டர் நீளம் உள்ள சாலை 7 மீட்டர் அகலம் கொண்டதாகவும், 200 மீட்டர் நீளம் உள்ள சாலை 12 மீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். மனை அமைவிடம் தவிர, மனையின் வடிவமும் முக்கியமானது. சதுரம், செவ்வகம் ஆகிய வடிவ மனைகள் சிறப்பானவை என்ற நிலையில் ஒழுங்கற்ற வடிவங்கள், முக்கோணம் மற்றும் பல கோணங்கள் கொண்ட மனைகள் வாங்குவது சிறப்பானதல்ல.

Related Tags :
Next Story