உட்புற அறைகளுக்கு உகந்த கல்நார் கதவுகள்


உட்புற அறைகளுக்கு உகந்த கல்நார்  கதவுகள்
x
தினத்தந்தி 25 Nov 2017 4:15 AM IST (Updated: 24 Nov 2017 5:38 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் அமைக்கப்படும்போது தலைவாசல் உள்ளிட்ட இதர அறைகளின் கதவுகளை பொருத்துவதில் கூடுதலாக கவனம் செலுத்துவது அனைத்து இடங்களிலும் வழக்கமான ஒன்று.

வீடுகள் அமைக்கப்படும்போது தலைவாசல் உள்ளிட்ட இதர அறைகளின் கதவுகளை பொருத்துவதில் கூடுதலாக கவனம் செலுத்துவது அனைத்து இடங்களிலும் வழக்கமான ஒன்று. பொதுவாக, தலைவாசல் மரத்தால் செய்யப்பட்டதாகவும், அதன் கதவுகள் மற்றும் நிலைகள் ஆகியவை உறுதியாகவும் அழகாகவும் அமைக்கப்படுவதை அனைவரும் விரும்புவார்கள்.

உள் அலங்காரம்

வீடுகளின் சமையலறை, படுக்கையறை மற்றும் குளியலறை போன்றவற்றிற்கு எளிமையான யு.பி.வி.சி கதவுகளை பயன்படுத்துவது புழக்கத்தில் உள்ளது. மேலும் அவற்றை உள் அலங்கார அடிப்படையில் பொருத்தமான கலர்களில் தேர்ந்தெடுத்தும் பொருத்துகின்றனர்.

பாதிப்புகள் இல்லை

வீடுகளின் உட்புறம் அமைக்கப்படும் அறைக்கதவுகள் தக்க உறுதியோடு இருப்பதோடல்லாமல், தரமானதாகவும் இருக்கவேண்டும். பொதுவாக, குளியல் அறை கதவுகளை அமைக்கும்போது, தண்ணீர் புழக்கம் காரணமாக பாதிக்கப்படாமல் இருக்க பி.வி.சி கதவுகளை பயன்படுத்தப்படுவது வழக்கம். குறிப்பாக, கையை கடிக்காத பட்ஜெட் மற்றும் விதவிதமான கலர்களிலும் அவை கிடைக்கின்றன.

பழைமையான கல்நார்

கல்நார் (Asbestos) என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு வகை சிலிகேட் கனிமம் ஆகும், இதன் நீளமான, மெல்லிய இழைபோன்ற தன்மையால், வணிக ரீதியாக பயன்படுகிறது. கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் கல்நார்கள் வகை பொருட்கள் வெள்ளை நிறமாக இருக்கும். வெப்பம், தீ ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை. எகிப்தியர்களின் காலம் முதல் கல்நார் பயன்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. கல்நார் வெண்மை, நீலம், செம்மஞ்சள் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

உறுதியாக இருக்கும்


பி.வி.சி வகை கதவுகளைப்போலவே கல்நார் வகை கதவுகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் தயாரிப்பில் பயன்படும் மூலப்பொருட்களை கொண்டு இவ்வகை கதவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கதவுகளை கனமான பொருட்கள் இடித்தாலோ, ரசாயன பொருட்கள் காரணமாகவோ எளிதாக பாதிப்புக்கு உள்ளாவதில்லை. வலுவான தன்மையுடன், பட்ஜெட்டுக்கு உட்பட்டதாகவும் கிடைப்பதால் கல்நார் கதவுகள் பல இடங்களில் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story