கட்டுமான பணிகளில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்


கட்டுமான பணிகளில் கவனிக்க  வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்
x
தினத்தந்தி 25 Nov 2017 4:45 AM IST (Updated: 24 Nov 2017 5:42 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளில் பாதுகாப்பு என்பது பிரதானம் என்ற நிலையில் அனைத்து இடங்களிலும் பணிகள் தக்க பாதுகாப்பான சூழலில் நடப்பதில்லை.

ட்டுமான பணிகளில் பாதுகாப்பு என்பது பிரதானம் என்ற நிலையில் அனைத்து இடங்களிலும் பணிகள் தக்க பாதுகாப்பான சூழலில் நடப்பதில்லை. அதன் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்ட பிறகுதான் பலரும் பாதுகாப்பு வி‌ஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பது கட்டுமானத்துறை வல்லுனர்களின் கருத்தாகும். மேலும், கட்டுமான பணிகளில் பாதுகாப்பு பற்றி பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் கீழ்க்கண்ட எச்சரிக்கைகளை தருகிறார்கள். அவற்றை இங்கே காணலாம்.

1. நெரிசல் நிறைந்த இடங்களில் பணியாற்றும் சூழல்

2. சரியான காற்றோட்டம் அல்லது வெளிச்சம் இல்லாத இடங்கள்

3. அதிகமான சத்தம், ஈரம் அல்லது பலமாக அதிரும் தரைப்பகுதிகள்

4. தீயணைப்பு வசதிகள் இல்லாமல் அல்லது செயல்படாத நிலையில் உள்ள பகுதிகள்,

5. பணியிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மின்சார கம்பிகள்

6. பாதுகாப்பு தடுப்புகளில்லாமல் சுழலும் இயந்திரங்கள்

7. சரியான தடுப்புகள் அமைக்கப்படாத மாடிகளின் திறந்த வெளிகள்

8. பழுதடைந்த இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்க முயற்சிப்பது

9. இயங்கும் இயந்திரத்தில் பழுதுகளை சரி பார்ப்பது

10. முறையான பாதுகாப்பற்ற நிலையில் மின்சார பணிகளை செய்வது

11. இயந்திரத்தின் பாதுகாப்பு அம்சங்களை கழட்டி வைத்துவிட்டு இயக்குவது

12. தனி மனித பாதுகாப்பு சாதனங்களை உபயோகிப்பதில் கவனமின்மை

13. பணியிடங்களில் உள்ள பாதுகாப்பு சாதனங்கள் சரியாக இயங்காமல் இருப்பது

14. மின்சார கருவிகளுக்கு சரியான ‘எர்த்’ இல்லாதது

Next Story