கட்டுமான பணிகளுக்கு ஏற்ற சிமெண்டு வகைகள்


கட்டுமான பணிகளுக்கு ஏற்ற சிமெண்டு வகைகள்
x
தினத்தந்தி 25 Nov 2017 4:45 AM IST (Updated: 24 Nov 2017 5:52 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளில் பயன்படும் வழக்கமான சிமெண்டு பற்றி நாம் அறிந்திருப்போம்.

ட்டுமான பணிகளில் பயன்படும் வழக்கமான சிமெண்டு பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், அவற்றில் போர்ட்லேன்ட் பொசலோனா, ஆர்டினரி போர்ட்லேன்ட், ராபிட் ஹார்டனிங் போர்ட்லேன்ட், சல்பேட் ரெசிஸ்டிங் போர்ட்லேன்ட், ஒயிட் போர்ட்லேன்ட் என்று பல்வேறு சிமெண்டு வகைகளும் புழக்கத்தில் இருந்து வருகின்றன.

சரியான தேர்வு

பொதுவாக கட்டுமான வகைகள், அவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு முறைகள், நிலத்தின் தன்மை, நிலத்தடி நீரின் தன்மை, தட்ப வெட்ப நிலை, காற்றில் நிலவும் ஈரப்பதம், சுற்றுப்புற சூழல் மற்றும் காற்றில் கலந்துள்ள ரசாயனங்கள் போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு சிமெண்டு வகைகளை நிபுணர்கள் தேர்வு செய்கிறார்கள்.

கடல் பகுதி கட்டுமானங்கள்

இரும்பு தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் சிலாக் (sறீணீரீ) எனும் பொருளை சேர்த்து தயாரிக்கப்படும் சிமெண்டானது, குளோரைடு மற்றும் சல்பேட் தாக்குதலில் இருந்து கான்கிரீட்டை பாதுகாக்கும் தன்மை வாய்ந்ததாக அறியப்பட்டுள்ளது. இவ்வகை சிமெண்டு கடலுக்குள் அமைக்கப்படும் கட்டுமானங்கள், கடல் சார்ந்த பகுதிகளில் அமைக்கப்படும் கட்டுமானங்கள் ஆகியவற்றிற்கு பொருத்தமானதாக உள்ளது.

‘சல்பேட் ரெசிஸ்டிங்’ சிமெண்டு

இவ்வகை சிமெண்டானது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானங்கள், இரசாயன தொழிற்சாலை கட்டுமானங்கள், நிலத்தடியில் சல்பேட் உப்பு அதிகம் உள்ள இடங்களில் நிலத்திற்கு கீழ் கட்டப்படும் கட்டுமானங்கள் போன்றவற்றில் பயன்படுகிறது. குளோரைடு தாக்குதலில் இருந்து இரும்பு கம்பிகளை பாதுகாக்கும் தன்மை இந்த சிமென்ட்டுக்கு குறைவாக உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

‘ராபிட் ஹார்டனிங்’ சிமெண்டு

அதி விரைவில் சீர் செய்ய வேண்டிய கட்டுமான பழுதுகள், அவசர கால கட்டுமானங்கள் போன்ர நிலைகளில் ராபிட் ஹார்டனிங் போர்ட்லேன்ட் சிமெண்டு பயன்படுகிறது. விரைவாக கடினத்தன்மை அடைவதோடு, அதிக வலுவும் கொண்டதாகவும் இவ்வகை சிமெண்டு உள்ளது. அந்த தன்மைகளால் ஹாலோ பிளாக் மற்றும் பேவர் பிளாக் தயாரிப்பாளர்களுக்கு கச்சிதமாக பயன்படக்கூடியது.  

வலிமை, நீடித்த உழைப்பு, விரிசல் பாதுகாப்பு, துரு ஏறாமல் தடுப்பு, சல்பேட் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, கசிவு, மாசு மற்றும் வாயுக்களில் இருந்து பாதுகாப்பு என சிறப்புகள் இந்த சிமெண்டுக்கு உண்டு. வீடுகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், நீர் பாசன கட்டுமானங்கள், சல்பேட் குளோரைடு தாக்குதலுக்கு வாய்ப்புள்ள கட்டுமானங்கள், நீர் தேக்கங்கள், கடல் சார்ந்த பகுதி கட்டுமானங்கள், கழிவு நீர் குழாய்கள் என அனைத்து கட்டுமானங்களுக்கும் இந்த சிமெண்டு பயன்படுகிறது. குறிப்பாக, வீடு மற்றும் வணிக கட்டிடங்களின் கட்டுமானங்களுக்கு இந்த சிமெண்டு ஏற்றதாக உள்ளது.

Next Story