‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் ‘டவர் கிரேன்’
பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் ரிமோட் கண்ட்ரோல் அடிப்படையில் இயங்குவதை அனைவரும் அறிவோம்.
பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் ரிமோட் கண்ட்ரோல் அடிப்படையில் இயங்குவதை அனைவரும் அறிவோம். கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களும் தற்போது ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, பெரிய அளவுள்ள கட்டுமான கருவியான ‘டவர் கிரேன்களும்’ தற்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன.
உயரமான இடத்தில் பணிகள்
‘பீம்கள்’ அமைத்தல், பெரிய அளவில் கான்கிரீட் ஸ்லாப்–களை கச்சிதமாக பொருத்துவது. தளங்களை அமைத்தல் மற்றும் ‘ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் பிரேம்’ பிட்டிங் மற்றும் தொழிற்சாலை அல்லது உயரமான கட்டமைப்புகளுக்கு ஆர்.சி.சி புகை போக்கிகள் பொருத்துவது ஆகிய வேலைகளை செய்ய டவர் கிரேன்கள் பயன்படுகின்றன.
பணிகள் அதிகரிப்பு
வழக்கமாக டவர் கிரேன்கள் ஆட்கள் மூலம் ‘மேனுவலாக’ இயக்கப்படுவது பொதுவானது. நகர்ப்புற கட்டுமானங்கள் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் உயரமான கட்டிடங்களுக்கான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘கிரேன்கள்’ ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும்போது பல சிக்கல்கள் தவிர்ப்பதாக அறியப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சி
எளிமையான முறையில் மின்சாரம் மூலம் செயல்பட்டு வந்த டவர் கிரேன்கள் தற்போது கூடுதல் வசதி மற்றும் கணினி கட்டுப்பாடு கொண்ட மாடல்களாக மாற்றம் பெற்று விட்டன. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட கட்டுமான தொழில் வளர்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
தரைத்தள கட்டுப்பாடு
டவர் கிரேன்களின் அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை பொறுத்து குறைந்தபட்சம் 6 முதல் 15 பேர் வரை தேவைப்படலாம். அதாவது, இரண்டு பொறியாளர்கள் உள்பட நான்கு தொழிலாளர்கள் அவசியம். மேலும், கிரவுண்டு லெவலில் இருப்பவர்களின் உத்தரவுக்கேற்ப உயரத்தில் கிரேனில் உள்ள ஆப்பரேட்டர் செயல்பட வேண்டும்.
விரைவான பணிகள்
மேற்கண்ட சூழலில் ஏதாவது தவறான புரிதல்கள் ஏற்படும் பட்சத்தில் பணிகளில் தாமதம் ஏற்படும். இனிமேல் உத்தரவு தரும் நபரே டவர் கிரேனையும் இயக்க முடியும் என்ற அடிப்படையில் பணிகள் விரைவாகவும், கச்சிதமாகவும் நடைபெறும்.

Related Tags :
Next Story