கட்டிட விரிசல் ஏற்பட காரணங்கள்
குளம் அல்லது குட்டைகள் போன்ற நீர் நிலைகளின் அருகில் அல்லது பூமிக்கடியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள வீடுகள் விரிசல்களால் எளிதில் பாதிப்படைகின்றன
குளம் அல்லது குட்டைகள் போன்ற நீர் நிலைகளின் அருகில் அல்லது பூமிக்கடியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ள வீடுகள் விரிசல்களால் எளிதில் பாதிப்படைகின்றன. காரணம் மேற்குறிப்பிட்ட அமைப்புகளால் மண்ணில் நீர்க்கசிவு ஏற்பட்டு, மண்ணில் பரவுகிறது. அதனால், அருகிலுள்ள கட்டமைப்புகளின் அஸ்திவாரம், அதனுள் நிரப்பப்பட்ட மணல், ரப்பீஸ் (உடைந்த செங்கல், கான்கிரீட்) போன்ற பொருட்கள் எளிதில் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்டு, அஸ்திவாரத்தை விரிவடைய செய்கின்றன.
அழுத்தும் விசை
இவ்வாறு விரிவடையும் அஸ்திவார அமைப்பின் மீது மேலிருந்து கீழாக அழுத்தும், கட்டிடத்தின் ஒட்டு மொத்த எடை காரணமாக, சுவர்களில் வளைவுகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டு, அஸ்திவார நிலையிலும் அதன் பிரதிபலிப்பு ஏற்படுகிறது. மழை காலங்களில் விரிசல் வழியாக தண்ணீர் எளிதில் உட்புகுந்துவிடும். மேலும் விரிசல்கள் காரணமாக வேறு வகையான பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
தொழில்நுட்ப ஆலோசனை
எனவே, கட்டுமான நிலையிலேயே விரிசல்கள் ஏற்படாதவாறு கவனித்து வடிவமைப்பது பல விதங்களில் பாதுகாப்பானது. பொதுவாக, தண்ணீர் மற்றும் அதன் ஈரப்பதம் ஆகியவை விரிசல்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. அதனால், ஈரப்பதத்தை தக்கவைக்கும் பகுதியில் வீடு கட்டும்போது தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளின் அடிப்படையில் அமைக்க வேண்டும்.

Related Tags :
Next Story