குடியிருப்புகள் பாதுகாப்பில் பிரதான அம்சங்கள்


குடியிருப்புகள் பாதுகாப்பில் பிரதான அம்சங்கள்
x
தினத்தந்தி 25 Nov 2017 5:00 AM IST (Updated: 24 Nov 2017 6:11 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகளின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் வீட்டு உரிமையாளர்கள் தாங்களே கடைப்பிடிக்க வேண்டிய வி‌ஷயங்களை கட்டுமான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கர்ப்புறங்களில் அதிகரித்து வரும் ஜனத்தொகை அதிகரித்து வரும் சூழலில் வீடுகள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் வீட்டு உரிமையாளர்கள் தாங்களே கடைப்பிடிக்க வேண்டிய வி‌ஷயங்களை கட்டுமான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களது ஆலோசனைகள் பின்வருமாறு:

* குடியிருப்புகளின் நுழைவாசல் கதவில் ‘டோர் லென்ஸ்’ பதிப்பது முக்கியம். அதன் மூலமாக வெளியில் நிற்பவரை கதவை திறக்காமலே பார்க்க இயலும்.

* ஒரு வேளை கதவை திறக்க வேண்டி வந்தாலும், முற்றிலும் திறக்க இயலாதவாறு தடுக்கக்கூடிய சிறிய அளவு கொண்ட ‘டோர் லாக்’ சங்கிலி இணைப்பும் அவசியமான ஒன்றாகும்.

* நம்பர் லாக், கைரேகை பதிவு லாக் மற்றும் நவீன பூட்டுக்கள் ஆகியவை தற்போது பெருமளவு உபயோகத்தில் உள்ளன. கூடுதலாக, ‘வாய்ஸ் மேட்ச்’, ‘ஐ வியூ மேட்ச்’ போன்ற அதிநவீன டெக்னாலஜியுடன் கூடிய பாதுகாப்பு சாதனங்களும் சந்தையில் கிடைக்கின்றன.

* வீட்டு உரிமையாளர் மட்டுமே எளிதாக அறியும்வண்ணம், லாக்கர்களுக்கான சரியான இடத்தை வீட்டு ‘பிளான்’ அமைப்பிலேயே முடிவு செய்வது நல்லது. அதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

* தரைத்தள மட்டத்தில் உள்ள லாக்கர்கள் பாதுகாப்பானது என்றாலும், அதற்குள் வைக்கப்பட்ட முக்கியமான பொருட்கள் அல்லது ஆவணங்கள் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை மனதில் கொள்ளவேண்டும்.

* சுவர்களில் உள்ள லாக்கர் அமைப்புகளை கச்சிதமாக மறைக்கக்கூடிய வகையில் படங்கள் அல்லது அலமாரி வகைகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அவை நல்ல தேர்வாகவும் இருக்கும்.

Next Story